அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிகாரம் கிடைத்தும் ஜாதியால் ஒடுக்கப்படுவது வேதனை

Updated : அக் 16, 2020 | Added : அக் 14, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
சென்னை : 'பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு, பதவி, அதிகாரம் கிடைத்தும், ஜாதியால் ஒடுக்கப்படுவது வேதனை' என, நடிகரும், மக்கள் நீதி மைய தலைவருமான கமல் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:பட்டியலினத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் அவமானப்படுத்தப்படுவதும், தீண்டாமை வன்கொடுமைகளுக்கு ஆளாவதும் தொடர்கதையாகி வருகிறது.இவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பிரதிநிதிகள்.
அதிகாரம், ஜாதி, வேதனை, கமல்

சென்னை : 'பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு, பதவி, அதிகாரம் கிடைத்தும், ஜாதியால் ஒடுக்கப்படுவது வேதனை' என, நடிகரும், மக்கள் நீதி மைய தலைவருமான கமல் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

பட்டியலினத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் அவமானப்படுத்தப்படுவதும், தீண்டாமை வன்கொடுமைகளுக்கு ஆளாவதும் தொடர்கதையாகி வருகிறது.இவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பிரதிநிதிகள். இவர்களை பணி செய்ய விடாமல் தடுப்பதற்கும், துன்புறுத்துவதற்குமான தைரியம் எங்கிருந்து வருகிறது?

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மாநில அளவிலான உயர்நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு தலைவராக இருப்பவர், தமிழக முதல்வர்.இந்த கமிட்டி, ஆண்டுக்கு இரு முறை கூட வேண்டும் என்பது விதி; ஆனால், ஏழாண்டுகளாக இந்த கமிட்டி கூட்டம் நடக்கவே இல்லை. தமிழகத்தில், ஜாதியின் பெயரால் நிகழும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மக்களின் உரிமையை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை.
ஜனநாயகத்தில், மக்கள் அனைவரும் சமம் எனும் சமத்துவக் கனவு நிறைவேற, மக்களின் உரிமைகளை மையமாகக் கொண்ட அரசு அமைய வேண்டும். அதை, மக்கள் நீதி மையம் செய்யும்.இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கணேஷ்வரன்    விழுப்புரம் திமுக வின் b டீம் என்னப்பா சொல்றாறு
Rate this:
Cancel
Mithun - Bengaluru,ஓமன்
15-அக்-202022:53:10 IST Report Abuse
Mithun ஜாதியை பற்றி பேசியே எத்தனை நாள் தான் வயிற்றை கழுவுவது. இதெல்லாம் ஒரு பிழைப்பு. ஊரு ரெண்டுபட்டால் தான் இவரது மதம் தழைத்தோங்கும் என்ற எண்ணம்.
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
15-அக்-202020:09:45 IST Report Abuse
GANESUN இப்போ கட்சி பேரை சொல்லாமல் விழுங்குவது ஏன்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X