போருக்கு தயாராகும் சீனா : ராணுவத்துக்கு புதிய உத்தரவு

Updated : அக் 16, 2020 | Added : அக் 14, 2020 | கருத்துகள் (10+ 7)
Share
Advertisement
பீஜிங் : 'எப்போதும் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும்' என, சீன ராணுவத்துக்கு, அந் நாட்டின் அதிபர், ஷீ ஜிங்பிங் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது, இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னையில், புது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்னை தீவிரமடைந்துள்ளது. இரு படைகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. எல்லையில் இருந்து படைகளை திரும்பப்
போர், சீனா,  ராணுவம்,  ஷீ ஜிங்பிங்

பீஜிங் : 'எப்போதும் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும்' என, சீன ராணுவத்துக்கு, அந் நாட்டின் அதிபர், ஷீ ஜிங்பிங் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது, இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னையில், புது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்னை தீவிரமடைந்துள்ளது. இரு படைகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக, இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே, ஏழு சுற்று பேச்சு நடந்துள்ளது. கடைசியாக நடந்த பேச்சின்போது, படைகள் விலக்கிக் கொள்வது தொடர்பாக, ஆக்கப்பூர்வமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சீன அதிபர், ஷீ ஜிங்பிங், குவாங்க்டாங்க் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாமுக்கு நேற்று சென்றுள்ளார். அப்போது வீரர்களிடம், 'நீங்கள் எப்போதும் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும். எப்போதும் விசுவாசமாகவும், நேர்மையாகவும், நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும்'என, ஜிங்பிங் கூறியுள்ளார்.

சீன அரசின் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.பேச்சு ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக கூட்டறிக்கையில் சீனா கூறியுள்ளது. ஆனால், அதற்கடுத்த நாளே, படைகளை தயார் நிலையில் இருக்கும்படி, சீன அதிபர் கூறியுள்ளது, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10+ 7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Marai Nayagan - Chennai,இந்தியா
15-அக்-202015:11:25 IST Report Abuse
Marai Nayagan சீனா 1951 இல் இருந்து தொடர்ந்து முதுகில் குத்தினாலும் இந்தியா அவர்களுக்கு இணக்கமாக பயந்து நடுங்கி இருக்க வேண்டும் என்பதே இங்குள்ள கம்யூனிச தேச த்ரோகிகள் எதிர்பார்ப்பு. வலிமையான நாடுகள் சேர்ந்தால்தால் தான் சிறிய நாடுகளை காக்க இயலும். இல்லையெனில் திபெத் கதிதான் நேபாளம், தைவான், பூட்டான் எல்லாம் சீன டிராகன் விழுங்கிவிடும். அதற்கு ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க ஒத்துழைப்பு தேவை
Rate this:
Cancel
Biil Brace - kandala,ஆப்கானிஸ்தான்
15-அக்-202013:41:28 IST Report Abuse
Biil Brace நண்டு கொழுத்து போச்சி வலையில் இருக்காது
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
15-அக்-202012:41:36 IST Report Abuse
siriyaar சீனாவுடனானா பொருளாதார தடையை நிரந்தரமாக்க வேண்டும். அதுவே சீனாவிற்கு இந்திய கொடுக்கும் மரண அடி. இதனால் சீனால் பலர் வேலை இழப்பர் இந்தியாவில் அனைவரின் வேலை இழப்புகளும் சரியாகும். நாம் போர் முனையில் ராகுல் காநதியை கட்டி வைத்தால் அவங்க தாக்கமல் இருக்க வாய்ப்பு அவங்க ஆட்களை தாக்க மாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X