பிசியான டில்லி ரோட்டில் கார் பேனட்டில் தொற்றிக் கொண்டு சென்ற போலீஸ்

Updated : அக் 15, 2020 | Added : அக் 15, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: விதிமீறி இயக்கப்பட்ட காரை தடுக்க முயன்ற டில்லி போக்குவரத்து போலீஸ் தடுக்க முயன்றார். ஆனால், டிரைவர் தப்பி செல்ல முயன்ற நிலையில், கார் பேனட்டில் சிறிது தூரம், அந்த போலீஸ் தொற்றி கொண்டு சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.டில்லியின் தவுலா கான் பகுதியில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில், மகிபால் சிங் என்ற போக்குவரத்து போலீஸ், அனுமதி
டிரைவர், டில்லி, போலீஸ், போக்குவரத்து போலீஸ்

புதுடில்லி: விதிமீறி இயக்கப்பட்ட காரை தடுக்க முயன்ற டில்லி போக்குவரத்து போலீஸ் தடுக்க முயன்றார். ஆனால், டிரைவர் தப்பி செல்ல முயன்ற நிலையில், கார் பேனட்டில் சிறிது தூரம், அந்த போலீஸ் தொற்றி கொண்டு சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டில்லியின் தவுலா கான் பகுதியில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில், மகிபால் சிங் என்ற போக்குவரத்து போலீஸ், அனுமதி பெறாமல் பேன்சி எண்ணுடன் வந்த காரை நிறுத்த முயன்றார். ஆனால் டிரைவர், காரை நிறுத்தாமல் தப்பி செல்ல முயன்றார். இதனையடுத்து மகிபால் சிங், காரின் பேனட்டில் குதித்து இறுக்க பிடித்து கொண்டார். போலீசிடம் இருந்து தப்பிக்க, டிரைவர் காரை தாறுமாறாக ஓட்டியும், மகிபால் சிங் விடவில்லை. சுமார் 400 மீ., தூரம் சென்ற நிலையில் மகிபால் சிங் கீழே விழுந்தார்.


latest tamil newsபின்னர், அங்கிருந்து தப்பித்து, டிரைவர் காரை அதிவேகமாக ஓட்டி சென்றார். இருப்பினும் ஒரு சிறிது தூரத்தில் போலீசார் அந்த காரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், டிரைவர், தெற்கு டில்லியின் உத்தம்நகரை சேர்ந்த சுபம் என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த காட்சிகள் அங்கிருந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அந்த வீடியோ சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-அக்-202020:56:59 IST Report Abuse
ஆப்பு இதுவே அமெரிக்காவா இருந்தா அந்த டிரைவரோட கழுத்து மேலே முட்டிக்காலை வெச்சு குரல் வளையை முறிச்சிருப்பாய்ங்க.
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
15-அக்-202019:22:28 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இவரின் இந்த துணிச்சலான செயலுக்கு மக்கள் தலை வணங்குகிறார்கள்.
Rate this:
Cancel
ram, nigeria - Lagos,நைஜீரியா
15-அக்-202017:52:20 IST Report Abuse
ram, nigeria Sad to note that no one had tried to stop the car or support the officer . If thought, any other car driver could have stopped this car. Even two wheel drivers to support him by carrying him after he fell down. Subham to be booked under series sections including threat of Murder . Jai Hind
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X