மருத்துவப்படிப்பில் 50% இடஒதுக்கீட்டை இந்தாண்டு வழங்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்

Updated : அக் 15, 2020 | Added : அக் 15, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி: மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (ஓபிசி) 50 சதவீத இடஒதுக்கீடு நடப்பு கல்வியாண்டில் வழங்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப் படிப்புகளில் இருந்து 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் இருந்து 50 சதவீத
SupremeCourt, OBC, CentralGovt, மருத்துவப்படிப்பு, ஓபிசி, இடஒதுக்கீடு, மத்தியஅரசு, உச்சநீதிமன்றம்

புதுடில்லி: மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (ஓபிசி) 50 சதவீத இடஒதுக்கீடு நடப்பு கல்வியாண்டில் வழங்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப் படிப்புகளில் இருந்து 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் இருந்து 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீடு என்ற வகையில் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இதேபோல், மற்ற மாநிலங்களும் வழங்குகின்றன. இந்நிலையில், இந்த இடங்களில் 50 சதவீதத்தை ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடாக வழங்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் அதிமுக, திமுக, உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.


latest tamil news


இதை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும்படியும், இது பற்றிய சட்ட வரையறைகளை 3 மாதங்களில் உருவாக்கும்படியும், அதற்காக சிறப்பு குழுவை அமைக்கும்படியும் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே (2020) அமல்படுத்த உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 13ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, 'மருத்துவப் படிப்பில் நடப்பாண்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியுமா? அல்லது இது குறித்த ஆலோசனை இன்னும் முடியாததால் 27 சதவீதமாவது கொடுக்க முடியுமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தி, அக்.,16க்குள் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுகக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


latest tamil newsஇந்நிலையில், மத்திய அரசு சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‛மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (ஓபிசி) 50 சதவீத இடஒதுக்கீடு நடப்பு கல்வியாண்டில் வழங்க முடியாது,' என தெரிவித்துள்ளது. ஓபிசி இடஒதுக்கீடு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் நடப்பாண்டில் இடஒதுக்கீடு இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
15-அக்-202021:52:43 IST Report Abuse
Vijay D Ratnam வறுமையில் வாடும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சென்று சேர வேண்டிய நியாமான இடஒதுக்கீட்டை அதை பலமுறை அனுபவித்துக்கொண்டு பரம்பரை பரம்பரையாக உண்டு கொழிப்பவர்களான கிரீமிலேயர்களை அகற்றாமல் இடஒதுக்கீடு என்பது பச்சை அயோக்கியத்தனம். உச்சநீதிமன்றம் தலையிட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கவேண்டும். பாவப்பட்ட அந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
15-அக்-202020:44:16 IST Report Abuse
Murthy இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கொள்கை கொண்டது இந்த மத்திய பிஜேபி அரசு... அப்படி இருக்கும்போது எப்படி அவர்கள் செய்வார்கள்?
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
15-அக்-202020:18:11 IST Report Abuse
Rajagopal இட ஒதுக்கீடுகள் நல்ல நோக்கத்தோடு, சுதந்திரம் பெற்ற காலத்தில், உண்மையிலேயே தேசத்தின் நலனைக் கருதிய அரசியல் தலைவர்களால் ஏற்படுத்த பட்டது. ஆனால் அடுத்த தலைமுறை அரசியல்வாந்திகள் அதை உருத்தெரியாமல் தங்களது ஓட்டுக்காக மாற்றி, உண்மையிலேயே பயன் பெற வேண்டியவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காமல், இப்போது இட ஒதுக்கீட்டை ஒரு பதவி அடையும் ஆயுதமாக மாற்றி அமைத்து விட்டார்கள். உண்மையான நோக்கத்திலிருந்து இது திசை திரும்பித் தவறான திசையில் சென்று விட்டது. இது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. இதில் பயன் பெறுவது வெறும் அரசியல்வாந்திகள்தான். அதனால் இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்து, இப்போது இருக்கும் சட்டத்தை ரத்து செய்து, ஒரு மத்திய மாநிலக் குழு ஒன்றை ஏற்படுத்தி, அரசியல்வாதிகளின் கையிலிருந்து முழுவதும் அகற்ற வேண்டும். இந்தக் குழு நாட்டில் இருக்கும் பேராசிரியர்கள், நீதிபதிகள், விஞ்ஞானிகள், கலைஞர்கள் போன்றவர்களால் அமைக்கப் பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எல்லாம் எப்படி வந்திருக்கிறது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்மையிலேயே உதவியிருக்கிறதா, இல்லையென்றால் என்ன விதமான மாற்றங்கள் தேவை, அதே சமயத்தில் மெரிட் எந்த விதமாகவும் பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று விவாதித்து அரசுக்கு வேண்டிய மாற்றங்களை பரிந்துரைக்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் நலமும் எதிர்காலமும் அனைவருக்கும் பயனளிக்கும் விதமாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X