சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : அக் 15, 2020
Share
Advertisement
கண்ணாடியில் வைரசின் காலம்கண்ணாடி, ரூபாய் நோட்டு, இலகுரக ஸ்டீல் போன்ற வற்றில் 28 நாட்கள் வரை கொரோனா வைரஸ் நிலைத்திருக்கும் என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது புளூ வைரசை விட அதிகம். 20 டிகிரி செல்சியஸ் வரை பிளாஸ்டிக், ரூபாய் நோட்டுகள், அலைபேசி, கண்ணாடியில் 28 நாட்கள் வரை இருக்கும். இந்த ஆய்வு வைராலஜி ஜேர்னல் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவே

கண்ணாடியில் வைரசின் காலம்

கண்ணாடி, ரூபாய் நோட்டு, இலகுரக ஸ்டீல் போன்ற வற்றில் 28 நாட்கள் வரை கொரோனா வைரஸ் நிலைத்திருக்கும் என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது புளூ வைரசை விட அதிகம். 20 டிகிரி செல்சியஸ் வரை பிளாஸ்டிக், ரூபாய் நோட்டுகள், அலைபேசி, கண்ணாடியில் 28 நாட்கள் வரை இருக்கும். இந்த ஆய்வு வைராலஜி ஜேர்னல் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவே இன்புளூயன்சா வைரஸ் எனில், 17 நாட்கள் இருக்குமாம். 20,30,40 என வெப்பநிலை அதிகரித்து சோதிக்கப்பட்டதில் வெப்ப நிலை உயர, வைரசின் ஆயுட்காலம் குறையும்.


தகவல் சுரங்கம்



உலக உணவு தினம்

உலகில் அனைவருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்.,16ல் உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'ஒன்றாக வளருங்கள்; வளர்த்துக் கொள்ளுங்கள்; நிலைநிறுத்து ங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. பட்டினியால் அவதிப்படுபவர்களின் உணவு தேவையை பூர்த்தி செய் வதே இதன் நோக்கம். அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டியது மனித உரிமையாக கருதப்படுகிறது. உலகில் 69 கோடி பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு, மேலும் 8.3-13.2 கோடி பேரை பட்டினி நிலைக்கு தள்ளும் என ஐ.நா., மதிப்பிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X