கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்'

Updated : அக் 17, 2020 | Added : அக் 15, 2020 | கருத்துகள் (21+ 43)
Share
Advertisement
மதுரை :'வெட்ட வெளியில் விவசாயிகளை மழையில் காக்க வைத்து, நெல் கொள்முதலுக்கு அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்பதாகக் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்' என அதிருப்தியை வெளியிட்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூர்யபிரகாசம் தாக்கல் செய்த பொது நல மனு: காவிரி டெல்டா
'லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்'

மதுரை :'வெட்ட வெளியில் விவசாயிகளை மழையில் காக்க வைத்து, நெல் கொள்முதலுக்கு அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்பதாகக் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்' என அதிருப்தியை வெளியிட்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூர்யபிரகாசம் தாக்கல் செய்த பொது நல மனு: காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருச்சி, நாகபட்டினம், திருவாரூர் மாவட்டங்களில், விவசாயிகள் நெல் அறுவடை செய்துள்ளனர். அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.சாலைகளில் பல மணி நேரம் வெயில், மழையில் காத்திருக்கும் விவசாயிகளுக்கு உணவு, குடிநீர் வசதி செய்யவில்லை. போதிய கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவிட வேண்டும். விவசாயிகளுக்கு உணவு, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, குறிப்பிட்டார்.

நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.மனுதாரர், 'விவசாயிகளிடம் மூட்டைக்கு, 30 முதல், 40 ரூபாய் வரை லஞ்சம் கேட்கின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிக்க உத்தரவிட வேண்டும். இடைத்தரகர்களை அனுமதிக்கக்கூடாது' என்றார்.நீதிபதிகள்: விவசாயிகள் இரவு, பகல் பாராமல் உழைத்து, உணவு உற்பத்தி செய்கின்றனர். விளை பொருட்களை, சரியான நேரத்தில் விற்பனை செய்ய இயவில்லை. வறுமையில் தற்கொலை செய்கின்றனர்.


இச்சூழலில், நெல் கொள்முதல் செய்ய, சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்கின்றனர். வெட்ட வெளியில் விவசாயிகளை மழையில் காக்க வைத்து, நெல் கொள்முதலுக்கு லஞ்சம் கேட்பதாகக் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது.லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். விவசாயிகள் கொண்டு வரும் ஒரு நெல்மணி, மழையில் நனைந்து முளைத்து வீணானால், அதற்கு காரணமான அலுவலரிடம் இழப்பீடு வசூலிக்க வேண்டும்.இவ்வாறு அதிருப்தியை வெளியிட்டனர்.


நீதிபதிகள் உத்தரவு:எத்தனை நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளன, நெல் மூட்டைகளை பாதுகாக்க, குடோன் வசதி உள்ளதா அல்லது தற்காலிகமாக பாதுகாக்க மாற்று ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதா; கொள்முதலுக்கு போதிய சணல் பைகள் உள்ளனவா; முறையாக பாதுகாக்காததால் எவ்வளவு நெல் மூட்டைகள், மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கப்படுகிறதா, என தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் தரப்பில் இன்று, ௧௬ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (21+ 43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-அக்-202023:33:21 IST Report Abuse
தமிழவேல் பிச்சை பிடுங்கி கறத்தல் நன்றே
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
16-அக்-202021:06:08 IST Report Abuse
M S RAGHUNATHAN The prevention of corruption act should be amed as below:. 1. The so called discip,,,,,linary proceedings by the departments in respect of bribery cases should be done away with. The employee should be susped with normal wages and within a period of 6 months the employee should prove his innocence in the designated court ( the complaint of corruption should be filed by the department on receiving the complaint straight in court) or otherwise the employee should be dismissed. The employee, if he wants go on appeal and if he is able to prove his innocence, can get back the job and backwages. Any judge can go incognito to any RTO office for renewal of DL, transfer of ownership of vehicle, lifting of hypothecation clause and seek the relevant form from the counter. If he does not get it he should disclose his identity to the RTO and ask the secretary of the department to dismiss the entire set of employees. But our judges are experts in only giving sermons and condemnations but would not do any thing in eradication of corruption. If a lower court judge has failed to apply his judicial wisdom or wrong interpretation of law in a judgement, which the HC overrules, such judges should be dismissed. The same with the judicial officers in cases of miscarriage of justice. Will they do?
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
16-அக்-202021:04:20 IST Report Abuse
Indhuindian பிச்சை எடுப்பவர்கள் அடித்து பிடுங்காவதில்லை பிச்சை போடுவதால் அவர்களுக்கு பிச்சைக்காரர்களால் ஆக வேண்டியது ஒன்னும் இல்லை ஆகவே பிச்சைக்காரர்கள் இவர்களைவிட மேலானவர்கள் ஞாயமானவர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X