அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஐந்து துணை முதல்வர் பதவிகள் தி.மு.க.,வுக்கு கூட்டணி கட்சிகள் நெருக்கடி

Added : அக் 15, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் சர்ச்சை ஓய்ந்துள்ள நிலையில், தி.மு.க.,வில், துணை முதல்வர் பதவி கேட்டு நெருக்கடி கொடுக்க, கூட்டணி கட்சிகள் சில திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.,வில், யார் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்னை, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் இடையே மோதலாக வெடித்தது.அக்கட்சி இரண்டாக பிளவுபடப் போகிறது என, எதிர்க்கட்சிகள்

அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் சர்ச்சை ஓய்ந்துள்ள நிலையில், தி.மு.க.,வில், துணை முதல்வர் பதவி கேட்டு நெருக்கடி கொடுக்க, கூட்டணி கட்சிகள் சில திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க.,வில், யார் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்னை, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் இடையே மோதலாக வெடித்தது.அக்கட்சி இரண்டாக பிளவுபடப் போகிறது என, எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்தன. ஆனால், முதல்வர் வேட்பாளராக, இ.பி.எஸ்., ஏகமனதாக அறிவிக்கப்பட்டார்.


மீண்டும் மலரும்

அதைத் தொடர்ந்து, முரண்டு பிடித்து வந்த பா.ஜ., கட்சி, 'மீண்டும் அ.தி.மு.க., கூட்டணியில் நீடிப்போம்' என, அறிவித்து விட்டது. ஆனால், தி.மு.க., கூட்டணியில், முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் என்பதை, கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அதே நேரத்தில், 'உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம்' என, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அறிவித்து விட்டன.

மேலும், 'தி.மு.க., கூட்டணியில், எங்களுக்கு கவுரவமான தொகுதி பங்கீடு வேண்டும். ஒற்றை இலக்கத்தில் தொகுதி ஒதுக்கீடு செய்தால், ௨௦௧௬ல், உருவான மக்கள் நலக் கூட்டணி மீண்டும் மலரும்' என, கூட்டணி கட்சிகள் மறைமுகமாக எச்சரித்துள்ளன.அதன் பின்னரே, 'கூட்டணிக்குள் குழப்பம் இல்லை' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் இறங்கி வந்து, அறிக்கை வெளியிட்டார். இந்த ஒட்டு வேலை தற்காலிகம் தான். தி.மு.க., கூட்டணியில், நாளுக்கு நாள் பல்வேறு பிரச்னைகள் முளைவிட துவங்கி உள்ளன.


ஆட்டி வைக்க திட்டம்

இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:தொகுதி பங்கீடு, விரும்பிய தொகுதிகள், எந்த சின்னத்தில் போட்டி, கூட்டணிக்குள் பா.ம.க., வருவது போன்ற விவகாரங்கள், தி.மு.க., தலைமை மீது, கூட்டணி கட்சிகளுக்கு பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளன. இந்த சந்தேகங்கள், கூட்டணிக்குள் புயலை கிளப்பும். லோக்சபா தேர்தலில் இருந்த கூட்டணி, சட்டசபை தேர்தலுக்கு தொடருமா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஐந்து துணை முதல்வர்கள் செயல்படுகின்றனர். அதுபோல, வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், ஸ்டாலின் தலைமையில், ஐந்து குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு, துணை முதல்வர் பதவி வழங்கவும், அக்கட்சி மேலிடம் ஆலோசித்துஉள்ளது.

ஆனால், அந்த ஐந்து துணை முதல்வர்கள் பதவிகளில், ஒன்றிரண்டை கூட்டணி கட்சிகள் கைப்பற்றவும் திட்டமிட்டுள்ளன இதனால், துணை முதல்வர் பதவியை விரும்பும் கூட்டணி கட்சிகள், 2016ல் உருவான மக்கள் நலக் கூட்டணி பார்முலாவை காட்டி, தி.மு.க.,வை ஆட்டி வைக்க திட்டமிட்டுஉள்ளன. இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
16-அக்-202013:39:46 IST Report Abuse
Indhuindian இதெல்லாம் ஜுஜுபி. சோ ஐம்பது வருஷத்துக்கு முன்னயே எல்லோரையும் மத்தியில் துணை பிரதமர் ஆக்கலயா? காலத்துக்கு ஏத்த மாதிரி மாறுங்க அப்பதான் ஏமாத்த சௌகரியமாக இருக்கும் கூட்டணி தேர்தலுக்கு மட்டும் தானா கூட்டு கொள்ளைக்கும்தான் அது தான் கூட்டணி தர்மம்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
16-அக்-202013:04:41 IST Report Abuse
Bhaskaran வன்னியர் சார்பாக துரைமுருகன் நாடாரிகள் சார்பாக பூங்கோதை .முக்குலதோர்சார்பாக பாலுமகன் ராஜா .இன்னும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் யாதவற்சார்பாக திமுகவிலிருப்பவர்கள் ரெண்டுபேருக்கு கொடுத்தால் போச்சு அவ்வளவுதான்
Rate this:
Cancel
Karthikeyan K Y - Chennai,இந்தியா
16-அக்-202011:25:57 IST Report Abuse
Karthikeyan K Y திமுகவை மக்கள் தேர்ந்தெடுக்கட்டும் பார்க்கலாம் , இந்து மதத்தை எதிர்த்து மறுத்து பேசி, கோயில் நிலங்களை அபகரித்து திமுக குடும்பங்களே கல்வி, மருத்துவம், மீடியா , தொழில் நிறுவனங்கள், போக்குவரத்து , விவசாய, கார்பொரேட் போன்ற அனைத்திலும் ஆக்ரமித்து இன்று கோலோச்சி சுமார் 20 குடும்பங்களிடம்தான் சொத்து இருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X