பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கால் ஓய்வெடுத்த ஆம்னி பஸ்கள் இன்று முதல் இயக்கம்

Updated : அக் 16, 2020 | Added : அக் 16, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில் ஊரடங்கால், ௧௭௬ நாட்களாக முடங்கியிருந்த ஆம்னி பஸ்கள், இன்று முதல் இயக்கப்பட உள்ளன. அதற்கேற்ப, பஸ்களை இயக்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், மத்திய அரசு அறிவித்த ஊரடங்கால், பொது போக்குவரத்துகள் முடங்கின. ஆம்னி பஸ்களின் சேவையும் நிறுத்தப்பட்டது.'ஆம்னி பஸ்கள் ஓடாத ஆறு மாதங்களுக்கான சாலை வரியை ரத்து
ஊரடங்கால் 175 நாட்கள் ஓய்வெடுத்த  ஆம்னி பஸ்கள் இன்று முதல் இயக்கம்

சென்னை : தமிழகத்தில் ஊரடங்கால், ௧௭௬ நாட்களாக முடங்கியிருந்த ஆம்னி பஸ்கள், இன்று முதல் இயக்கப்பட உள்ளன. அதற்கேற்ப, பஸ்களை இயக்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், மத்திய அரசு அறிவித்த ஊரடங்கால், பொது போக்குவரத்துகள் முடங்கின. ஆம்னி பஸ்களின் சேவையும் நிறுத்தப்பட்டது.'ஆம்னி பஸ்கள் ஓடாத ஆறு மாதங்களுக்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். ௧௦௦ சதவீத பயணியருடன் இயக்க அனுமதிக்க வேண்டும்.


latest tamil news



'ஏசி' பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, அரசிடம் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வலியுறுத்தினர்.இதுகுறித்து, வழக்கும் தொடர்ந்தனர். இந்த வழக்கு, 12ம் தேதி விசாரணைக்கு வந்த போது, சாலையில் ஓடாத, ஆம்னி பஸ்கள் குறித்த விபரங்களை வழங்கினால், வரி விலக்கு அளிப்பதாக, அரசு தெரிவித்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் தமிழக அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம், காணொலி வழியாக நடந்தது. கூட்டத்தில், ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டதற்கான, பி.வி.ஆர்., என்ற, 'பிசிக்கல் வெரிபிகேஷன் ரிப்போர்ட்' பெற்று, போக்குவரத்து கமிஷனரிடம் வழங்கி, வரி விலக்கு பெற்று, பஸ்களை இயக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, தமிழக உரிமம் பெற்ற, 947 பஸ்களில், முதல்கட்டமாக, 500 பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன.அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க செயலர் அன்பழகன் கூறியதாவது:கடந்த, 176 நாட்களாக ஆம்னி பஸ்கள் ஓடாததால், இரண்டு லட்சம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், எங்களின் கோரிக்கையை ஏற்று, இரண்டு காலாண்டுகளுக்கான வரி விலக்கை அரசு அளித்துள்ளது. எனவே, தமிழக உரிமம் பெற்ற ஆம்னி பஸ்களை, பேரிடர் சட்ட விதிமுறைகளை பின்பற்றி, இன்று இயக்க உள்ளோம். பெரும்பாலான ஆம்னி பஸ்களில், ஜன்னல் கண்ணாடிகள், 'சீல்' வைக்கப்பட்டிருக்கும் என்பதால், உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள, 'ஏசி' பயன்படுத்தும் அளவை பின்பற்றி, பஸ்களை இயக்க, போக்குவரத்து கமிஷனரிடம் அனுமதி கோரியுள்ளோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.இன்று முதல் இயக்கப்பட உள்ளதால், அதற்கேற்ப ஆம்னி பஸ்களை சுத்தப்படுத்தி, இயக்கத்திற்கு தயார்படுத்தும் பணிகளில், ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RK NATARAJ - madurai ,இந்தியா
16-அக்-202013:40:16 IST Report Abuse
RK NATARAJ தீபாவளி வருது, உங்க புத்தி இருக்கே புத்தி, பஸ் ரேட் ஐ 2000 வரைக்கும் ஏற்றி விடுவீர்கள். திருந்தாவிடில் நிச்சயம் லாக் டவுன் போட வேண்டி இருக்கும்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
16-அக்-202012:56:59 IST Report Abuse
Bhaskaran ஆறுமாத நஷ்டத்தை பயணிகள் தலையில் கட்டிடுவாங்க
Rate this:
Cancel
Rathnakumar Rajamani - Chennai,ஐக்கிய அரபு நாடுகள்
16-அக்-202008:44:19 IST Report Abuse
Rathnakumar Rajamani ஆம்னி பஸ் சுத்தப்படுத்துதல் நல்ல விஷயமே . ஆனால் அவர் எந்த வித பாதுகாப்பு பட்டயம் அணியாமல் சுத்தம் செய்கிறாரே . அவர் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு .இதற்கு பதில் பட்டயம் அணிந்து வேறு ஒரு ஏணியில் நின்று வேலை செய்தால் அவர் பாதுகாப்பு உறுதி அளிக்கபடுமே . இது எல்லோரும் கவனிக்க வேண்டிய விஷயம் . மிக்க நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X