புற்றுநோய் கண்டறியும் முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புற்றுநோய் கண்டறியும் முகாம்

Added : அக் 16, 2020
Share
வாழப்பாடி: வாழப்பாடி அருகே, பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், லயன்ஸ் சங்கத்துடன் இணைந்து, புற்றுநோய் கண்டறிதல், விழிப்புணர்வு முகாம், நேற்று நடந்தது. பேளூர் மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார். மருத்துவர்கள், புற்றுநோய் பரவும் விதம், தடுக்கும் முறை, சுய பரிசோதனை முறை, உணவு பழக்கவழக்கம், ஆரம்பகால அறிகுறி குறித்து விளக்கினர். செவிலியர்கள், ஊட்டச்சத்து

வாழப்பாடி: வாழப்பாடி அருகே, பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், லயன்ஸ் சங்கத்துடன் இணைந்து, புற்றுநோய் கண்டறிதல், விழிப்புணர்வு முகாம், நேற்று நடந்தது. பேளூர் மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார். மருத்துவர்கள், புற்றுநோய் பரவும் விதம், தடுக்கும் முறை, சுய பரிசோதனை முறை, உணவு பழக்கவழக்கம், ஆரம்பகால அறிகுறி குறித்து விளக்கினர். செவிலியர்கள், ஊட்டச்சத்து கண்காட்சி அமைத்து, தொற்றா நோய், பின்பற்ற வேண்டிய உணவு பழக்கங்கள் குறித்து விளக்கினர். இதில், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் உள்பட, 80 பெண்களுக்கு, மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X