ஜி.ஹெச்.,ல் சீர்கேடு கண்டித்து ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.ஹெச்.,ல் சீர்கேடு கண்டித்து ஆர்ப்பாட்டம்

Added : அக் 16, 2020
Share
அரூர்: அரூர், அரசு மருத்துவமனையின் சீர்கேட்டை கண்டித்து, இ.கம்யூ., கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரூர், கச்சேரிமேட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய செயலாளர் அல்லிமுத்து, மாதர் தேசிய சம்மேளன மாவட்ட செயலாளர் கமலா மூர்த்தி ஆகியோர், தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், அரூர் அரசு மருத்துவமனையில், மக்களுக்கு அலட்சியமாகவும், கவனக்குறைவோடும் சிகிச்சை

அரூர்: அரூர், அரசு மருத்துவமனையின் சீர்கேட்டை கண்டித்து, இ.கம்யூ., கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரூர், கச்சேரிமேட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய செயலாளர் அல்லிமுத்து, மாதர் தேசிய சம்மேளன மாவட்ட செயலாளர் கமலா மூர்த்தி ஆகியோர், தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், அரூர் அரசு மருத்துவமனையில், மக்களுக்கு அலட்சியமாகவும், கவனக்குறைவோடும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனையில் பணிபுரியும், தற்காலிக தூய்மை ஊழியர் ஒருவர், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு ஊசி, மருந்துகளை கையாள்வதாகவும், அவர் கொடுத்த மருந்து, மாத்திரைகளால், சிலர் உடல்நலம் பாதித்து அவதிப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனையில் நிறுத்தப்படும், இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதை தடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைச்செயலாளர் தமிழ்க்குமரன், நகர செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X