பொது செய்தி

தமிழ்நாடு

முதுகலை ஆசிரியருக்கு பணி வரன்முறை ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவு

Added : அக் 16, 2020
Share
Advertisement
சேலம்: அமைச்சு பணியாளராக இருந்து, முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவருக்கு, பணிவரன்முறைப்படுத்துவதற்கான விபரம், ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன.தமிழக பள்ளி கல்வித்துறையில், அமைச்சு பணியாளராக பணிபுரிவோரில், தகுதியான கல்வித்தகுதி பெற்றவருக்கு, முதுகலை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. 2011 முதல், 2014 வரை, பணியிடத்தில், 2 சதவீதம், இப்பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டது.

சேலம்: அமைச்சு பணியாளராக இருந்து, முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவருக்கு, பணிவரன்முறைப்படுத்துவதற்கான விபரம், ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன.


தமிழக பள்ளி கல்வித்துறையில், அமைச்சு பணியாளராக பணிபுரிவோரில், தகுதியான கல்வித்தகுதி பெற்றவருக்கு, முதுகலை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. 2011 முதல், 2014 வரை, பணியிடத்தில், 2 சதவீதம், இப்பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டது. இவர்களுக்கு, பதவி உயர்வு வழங்க, தமிழ்நாடு மேல்நிலை கல்விப்பணி சிறப்பு விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், அவர்களின் பணிவரன்முறை செய்வதில் சிக்கல் நிலவியது. தற்போது, அரசாணை திருத்தம் வெளியிட்டுள்ள நிலையில், அமைச்சு பணியாளரிலிருந்து, முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, பணிவரன்முறை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில், பணிவரன்முறை செய்ய வேண்டிய ஆசிரியர்களின் விபரம், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை, அறிக்கையாக சமர்ப்பிக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X