முதல்வரின் தாயார் அஸ்தி: காவிரியாற்றில் கரைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வரின் தாயார் அஸ்தி: காவிரியாற்றில் கரைப்பு

Added : அக் 16, 2020
Share
இடைப்பாடி: முதல்வரின் தாயார் அஸ்தி, காவிரியாற்றில் கரைக்கப்பட்டது. முதல்வர் பழனிசாமியின் சொந்த ஊர், சேலம் மாவட்டம், இடைப்பாடி, சிலுவம்பாளையம். இங்கு வசித்த இவரது தாயார் தவுசாயம்மாள் மறைவை அடுத்து, நேற்று காரியம் நடந்தது. சிலுவம்பாளையம் வீட்டில் இருந்து மயானத்துக்கு, முதல்வர், அவரது அண்ணன் கோவிந்தராஜ், முதல்வரின் மனைவி ராதா, மகன் மிதுன்குமார் உள்ளிட்ட

இடைப்பாடி: முதல்வரின் தாயார் அஸ்தி, காவிரியாற்றில் கரைக்கப்பட்டது. முதல்வர் பழனிசாமியின் சொந்த ஊர், சேலம் மாவட்டம், இடைப்பாடி, சிலுவம்பாளையம். இங்கு வசித்த இவரது தாயார் தவுசாயம்மாள் மறைவை அடுத்து, நேற்று காரியம் நடந்தது. சிலுவம்பாளையம் வீட்டில் இருந்து மயானத்துக்கு, முதல்வர், அவரது அண்ணன் கோவிந்தராஜ், முதல்வரின் மனைவி ராதா, மகன் மிதுன்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன், ராஜு, டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் நேற்று காலை ஊர்வலமாக சென்றனர். மயானத்தில், முதல்வரின் அண்ணன் கோவிந்தராஜ், தாயின் அஸ்திக்கு சடங்கு, பூஜை செய்து, அஸ்தியை காவிரியாற்றில் கரைத்தார். பின், அனைவரும் வீடு திரும்பி, தவுசாயம்மாள் படத்துக்கு பூஜை செய்தனர். பா.ஜ.,வின், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், புதிய நீதிக்கட்சி தலைவர் சண்முகம் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் பலர், தவுசாயம்மாள் படத்துக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, முதல்வர் பழனிசாமிக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X