தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு தாராளம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு தாராளம்

Added : அக் 16, 2020
Share
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, பள்ளபட்டி பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாலித்தீன் கவர்கள், தங்குதடையின்றி பயன்படுத்தப்பட்டு வருகிறது.உணவகங்கள், பிரியாணி கடைகள், கறிக்கடைகள் மற்றும் டீக்கடைகளில் உணவு பொருள்களை பார்சல்கள் செய்வதற்கு, பாலித்தீன் கவர்களையே பயன்படுத்தி வருகின்றனர். புரோட்டா மற்றும் பிரயாணி வாங்கும் வாடிக்கையாளர்கள் சைடிஷ்சாக முட்டை

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, பள்ளபட்டி பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாலித்தீன் கவர்கள், தங்குதடையின்றி பயன்படுத்தப்பட்டு வருகிறது.


உணவகங்கள், பிரியாணி கடைகள், கறிக்கடைகள் மற்றும் டீக்கடைகளில் உணவு பொருள்களை பார்சல்கள் செய்வதற்கு, பாலித்தீன் கவர்களையே பயன்படுத்தி வருகின்றனர். புரோட்டா மற்றும் பிரயாணி வாங்கும் வாடிக்கையாளர்கள் சைடிஷ்சாக முட்டை குருமா, சாப்ஸ் கிரேவி மற்றும் சாம்பார் போன்றவை கேட்கும்போது, கொஞ்சமும் தாமதிக்காமல், பாலித்தின் கவர்களில் பேக் செய்து தருகின்றனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக்கூடாது என, பெயரளவில் அரசு அதிகாரிகள் கூறி செல்வதுடன் கண்டுகொள்வதில்லை. எனவே, இனிமேலாவது அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்ய முன்வர வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X