புதுடில்லி: நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 10. 3 சதவீதமாக வீழ்ச்சி அடையும் என சர்வதேச நிதியம் குறிப்பிட்டுள்ளது. பா.ஜ., அரசின் மற்றொரு மகத்தான சாதனை என காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சனம் செய்துள்ளார்.
சர்வதேச நிதியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டில், மைனஸ் 10.3 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. மேலும், சீனா, மியான்மர், நேபாளம், பூடான், இலங்கை, ஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதில், அதிகளவு பாதிப்பு இந்தியாவிற்கு தான் எனக்குறிப்பிடப்பட்டது.

இதனை மேற்கோள் காட்டி காங்கிரஸ் எம்.பி., ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: பா.ஜ., அரசின் மற்றுமொரு மகத்தான சாதனை. கொரோனாவை கையாள்வதில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட, இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Another solid achievement by the BJP government.
Even Pakistan and Afghanistan handled Covid better than India. pic.twitter.com/C2kILrvWUG
— Rahul Gandhi (@RahulGandhi) October 16, 2020
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE