உலகில் காற்று மாசு அதிகரிப்பதற்கு இந்தியா, சீனா, ரஷ்யாவே காரணம்: டிரம்ப் குற்றச்சாட்டு

Updated : அக் 16, 2020 | Added : அக் 16, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
வாஷிங்டன்: உலக அளவில் காற்று மாசு அதிகரிப்பதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் தான் காரணம் எனவும், காற்றில் அதிகமான அளவு மாசடைந்த வாயுக்களை இந்த நாடுகள்தான் வெளியேற்றுவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவ.,3ம் தேதி நடக்கிறது. இதற்காக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். சமீபத்தில் கொரோனா தொற்றால்
GlobalPollution, Air, DonaldTrump, China, Russia, India, காற்று மாசு, டிரம்ப், இந்தியா, சீனா, ரஷ்யா, குற்றச்சாட்டு

வாஷிங்டன்: உலக அளவில் காற்று மாசு அதிகரிப்பதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் தான் காரணம் எனவும், காற்றில் அதிகமான அளவு மாசடைந்த வாயுக்களை இந்த நாடுகள்தான் வெளியேற்றுவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவ.,3ம் தேதி நடக்கிறது. இதற்காக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கிட்டத்தட்ட 10 நாட்களாக பிரசாரத்தில் ஈடுபடவில்லை. இந்நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில், மீண்டும் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். வடக்கு கரோலினாவில் நடந்த பிரசாரத்தில் டிரம்ப் பேசியதாவது: உலக அளவில் காற்று மாசு அதிகரிப்பதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் தான் காரணம். காற்றில் அதிகமான அளவு மாசடைந்த வாயுக்களை இந்த நாடுகள்தான் வெளியேற்றுகின்றன.


latest tamil news



ஆனால், அமெரிக்காவைப் பொறுத்தவரை குறைந்த அளவுதான் காற்றில் மாசு வாயுவைக் கலக்கிறது. அதுமட்டுமல்லாமல், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், எரிசக்தியிலும் தன்னிறைவு அடைந்துள்ளது. அமெரிக்க வேலை அமெரிக்க மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். டென்னஸி நகரில் ஒரு நிறுவனத்தின் தலைவர் அமெரிக்கப் பணியாளர்களை மாற்றி வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தினார். அந்த நிறுவனத்தின் தலைமைக்கு நான் விடுத்த எச்சரிக்கைக்குப் பின், மீண்டும் அமெரிக்க மக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
16-அக்-202018:52:30 IST Report Abuse
S. Narayanan அமெரிக்காவும் காரணம் என்பதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி.
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
16-அக்-202018:39:14 IST Report Abuse
Sanny உண்மையாக இருந்தாலும், அமெரிக்கா செய்யும் அணு ஆராச்சி, அதன் கழிவுகள், அணு பரிசோதனையால் எட்படும் நில அதிர்வுகள், ஓசோன் பாதிப்புகள் அதிகம், ஆப்கானிஸ்தானில் மலைப்பகுதியில் மலையை ஊடுருவி துளைத்து செல்லும் குண்டுகளால் அதிர்வும் தாக்கமும் அண்டவெளியை பாதிப்பதாக சொல்லப்படுகிறது, இதில் நம்ப முடியாதவிடயம் ஆனால் நம்பவேண்டிய விடயம் அண்டவெளியில் உலாவரும் ஏலியன்களும் அமெரிக்க பெண்டகன் மையத்துக்கு எச்சரிக்கையும் விட்டதாக அமெரிக்க விண்வெளி ஆராச்சியாளர்கள் சொல்வதாக தகவல் உலாவுது பல இணையங்களில்.
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
16-அக்-202018:02:46 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam அமெரிக்காதான் மாசுபடுத்துவதாகச் சொல்கின்றனர். இது உண்மை இல்லாயா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X