புதுடில்லி: மஹாராஷ்டிரா மாநில அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மஹாராஷ்டிரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ., சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், இக்கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கூட்டணி முறிந்தது. இதன் பின்னர், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைத்தார்.
இந்நிலையில், டில்லியை சேர்ந்த 3 பேர், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மஹாராஷ்டிரா மாநில அரசை கலைத்துவிட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனக்கூறியிருந்தனர்.

இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன், மனுதாரர் ஜனாதிபதியை அணுகலாம். இங்கு வரக்கூடாது என உத்தரவு பிறப்பித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE