பீஹார் சட்டசபை தேர்தல்: 12 இடங்களில் மோடி பிரசாரம்

Updated : அக் 16, 2020 | Added : அக் 16, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: பீஹார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 23 ம் தேதி முதல் 12 இடங்களில் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார் என அம்மாநில பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.பீஹார் சட்டசபைக்கு வரும் 28ல் துவங்கி 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவ.,10ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. பா.ஜ.,வும், ஐக்கிய ஜனதா தளம் இணைந்து
Biharelection, PmModi, Narendramodi, devendrafadnavis, தேவேந்திரபட்னாவிஸ், பீஹார் தேர்தல், பிரதமர் மோடி

புதுடில்லி: பீஹார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 23 ம் தேதி முதல் 12 இடங்களில் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார் என அம்மாநில பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

பீஹார் சட்டசபைக்கு வரும் 28ல் துவங்கி 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவ.,10ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. பா.ஜ.,வும், ஐக்கிய ஜனதா தளம் இணைந்து தேசிய ஜனநாய கூட்டணி சார்பில் நிதிஷ்குமார் முன்னிறுத்தப்பட்டுள்ளார். ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளன.

இந்நிலையில் அக்.,23ம் தேதி துவங்கி, 12 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார்.


latest tamil news



அக்.,23ல் சசாரம், கயா மற்றும் பாகல்பூரில் நடக்கும் கூட்டங்களிலும், அக்.,28 ல் தர்பங்கா,முசாபர்பூர் மற்றும் பாட்னாவில் நடக்கும் கூட்டங்களிலும், நவ.,3 ல் மேற்கு சம்பாரன், சஹர்சா மற்றும் அரேரியாவில் நடக்கும் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பேச உள்ளார் என பீஹார் மாநில பா.ஜ.,வின் தேர்தல் பொறுப்பாளர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-அக்-202022:37:05 IST Report Abuse
தமிழவேல் மேக்கப் போட்டாகணுமா... 😂😂😂
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
16-அக்-202020:28:17 IST Report Abuse
J.Isaac காரியம் மாறுதலாய் முடியும்
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
16-அக்-202018:58:05 IST Report Abuse
dina பீகார் தேர்தல் 100 சதவீதம் பி ஜே பி வெற்றி பெரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X