மக்கள் நீதி மையத்தின் முதல்வர் வேட்பாளர் கமல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் நீதி மையத்தின் முதல்வர் வேட்பாளர் கமல்

Updated : அக் 16, 2020 | Added : அக் 16, 2020 | கருத்துகள் (58)
Share
சென்னை: 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில்
MNM, Kamalhaasan, CM_Candidate, MakkalNeedhiMaiam, மக்கள் நீதி மய்யம், கமல், கமல்ஹாசன், முதல்வர், வேட்பாளர்

சென்னை: 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் அக்கட்சியின் மாநில நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு துவங்கியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டத்தில் 2021 சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்தும், தேர்தல் அறிக்கை தயாரிப்பது, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.


latest tamil news




கூட்டத்திற்கு பிறகு அக்கட்சி சார்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2021 சட்டசபை தேர்தலின்போது தனித்துப் போட்டியிடுவது அல்லது ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது, வேட்பாளர்களை இறுதி செய்வது, தேர்தல் வெற்றிக்கான வியூகம் அமைப்பது, கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பை கமல்ஹாசனுக்கு அளிக்கப்படுவதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மையத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் அறிவித்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X