சுத்தம் அவசியம்
துணியால் தயாரிக்கப்படும் முகக்கவசத்தை தினமும் அதிக வெப்பநிலையில் துவைத்தால் மட்டுமே வைரசில் இருந்து பாதுகாக்க உதவும் என ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணி அல்லது சர்ஜிக்கல் என எந்த முகக்கவசமானாலும் ஒருமுறை பயன்படுத்தினால் அது அசுத்தமானது. இதில் சர்ஜிக்கல் மாஸ்க் பயன்படுத்திய பின் குப்பையில் சேர்க்கப்படுகிறது. ஆனால் துணி மாஸ்க் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. அதை துவைப்பது அவசியம். தினமும் ஒரே மாஸ்க் அணிவதை தவிர்க்கவும். 2015ல் எடுக்கப்பட்ட ஆய்வு, தற்போது வெளியிடப்பட்டது.
தகவல் சுரங்கம்
வறுமை ஒழிப்பு தினம்
ஒருவர் வறுமையால் பாதிக்கப்பட்டால், அவரது மனித உரிமை மீறப்படுகிறது என்கிறார் பிரான்சின் ஜோசப் ரெசின்கி. இவர் சிறு வயது முதலே வறுமைக்கு எதிராக போராடியவர். இவரது முயற்சியால் உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக்., 17ல் உருவாக்கப்பட்டது. 'சமூக, சுற்றுச்சூழல் நீதி அனைவருக்கும் கிடைக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. 2015ன்படி, 73.6 கோடி பேர் ஒரு நாளைக்கு ரூ. 140க்கு கீழ் வருமானத்துடன் வாழ்கின்றனர். உணவு, குடிநீர், உடை, இருப்பிடம், கல்வி, வேலை இல்லாதவர்கள் வறுமையானவர்கள் என கருதப்படுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE