அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' மந்திரி பொன்முடி மகனின் ரூ.8.60 கோடி சொத்து முடக்கம்

Added : அக் 16, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை:வெளிநாடுகளில், சட்ட விரோதமாக முதலீடு செய்து, பல கோடி ரூபாய் சம்பாதித்து, அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்ட, தி.மு.க., - எம்.பி., கவுதம சிகாமணியின், 8.60 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கினர். தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி; கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.,யாக உள்ளார்.இவர், 2008ம் ஆண்டில், இந்தோனேஷியா
 'மாஜி' மந்திரி பொன்முடி மகனின்  ரூ.8.60 கோடி சொத்து முடக்கம்

சென்னை:வெளிநாடுகளில், சட்ட விரோதமாக முதலீடு செய்து, பல கோடி ரூபாய் சம்பாதித்து, அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்ட, தி.மு.க., - எம்.பி., கவுதம சிகாமணியின், 8.60 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கினர்.

தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி; கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.,யாக உள்ளார்.இவர், 2008ம் ஆண்டில், இந்தோனேஷியா நாட்டின் தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள, 'பிடி எக்சல் மெகிண்டோ' என்ற நிறுவனத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறாமல், சட்ட விரோதமாக, 1 லட்சம் அமெரிக்க டாலர்; அப்போதைய இந்திய மதிப்பில், 41.57 லட்சம் ரூபாய்க்கு, 2.௪௫ லட்சம் பங்குகளை வாங்கி, முதலீடு செய்துள்ளார்.

அதேபோல, ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள நிறுவனம் ஒன்றில், 55 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு, அப்போதைய இந்திய மதிப்பில், 21.86 லட்சம் ரூபாய்க்கு முதலீடு செய்து உள்ளார். இதன் வாயிலாக, பல கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளார். இது குறித்து, தொடர்ச்சி 11ம் பக்கம்'மாஜி' மந்திரி...அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ், தமிழகத்தில், கவுதம சிகாமணிக்கு சொந்தமான விவசாய நிலம், வணிக வளாகம் என, 8.60 கோடி ரூபாய் மதிப்புள்ள, அசையா சொத்துக்களை நேற்று முடக்கினர். இந்த முறைகேடு நடந்தபோது, பொன்முடி உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்தார். வெளிநாடுகளில் முதலீடு செய்யும் அளவுக்கு, இவ்வளவு பணம் எப்படி வந்தது என்பது குறித்து, கவுதம சிகாமணியிடம் விசாரிக்கவும், அமலாக்கத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
17-அக்-202020:51:32 IST Report Abuse
M  Ramachandran பொன்முடி அமைச்சராக இருந்தபோது தான் வாய் மொழி உத்தரவாக எல்லா பயணிகள் பஸ்ஸுகளும் திண்டிவனம் விழுப்புரம், அருகில் உள்ள காலரா ஓட்டலில் தான் கண்டிப்பாக நிறுத்தி செல்லவேண்டும். மாமண்டூரில் டிரான்ஸ்போர்ட் நிறுத்துமிடத்தில் வசதியாக ஏற்பாடுகள் செய்திருந்தும் காலரா ஓட்டலில் பஸ் நிறுத்தாவிட்டால் ஓட்டுனருக்கு மெமோ. மறக்க முடியுமா. ஒரு காலத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எக்ஸ்பிரஸ் பஸ் அட்டவணையில் உணவுக்காக பஸ் எந்த இடத்தில் நிற்கும் என்று தெரிவித்திருப்பார்கள். சுகாதாரமாகவும் இருக்கும். இவர்கள் வந்து பயணிகளை மனிதர்களாக நலன் அறிந்து நடத்தவில்லை. திண்டிவனம் எக்ஸ்பிரஸ் பஸ் ஸ்டான்ட் ஒலிபெருக்கியில் பஸ் தடம் என்னுடன் புறப்படுவதை அறிவிப்பார்கள். எப்படி இருந்த எக்ஸ்பிரஸ் பஸ் இன்று எப்படி ஆகிவிட்டது.
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
17-அக்-202018:02:29 IST Report Abuse
ponssasi ஸ்டாலின் என்ன சொல்லப்போறாரோ தெரியல. MP. பதவியை ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும். அதுதான் தலைமைக்கு அழகு, ஆனா பொண்ணுமுடி நீங்க யோக்கியமானு கேப்பாரே அதுக்கு ஸ்டாலின் என்ன சொல்லுவாரு.
Rate this:
Cancel
Shekar - Mumbai,இந்தியா
17-அக்-202014:11:34 IST Report Abuse
Shekar இப்படியா அப்பா பேரை கெடுப்பது, கேவலம் 8.6 கோடி, குறைஞ்சபட்சம் 8,600 கோடி என்றால் புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா என்று பெருமைப்படலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X