பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர்கள் குரலில் விழிப்புணர்வு நடன கலைஞர்கள் தீவிரம்

Added : அக் 17, 2020
Share
Advertisement
பெ.நா.பாளையம்:துடியலூர் போலீசார் மற்றும் தமிழ்நாடு திரைப்பட மேடை நடன கலைஞர்கள் நலச் சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.துடியலூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட இடையர்பாளையம், கவுண்டம்பாளையம், துடியலூர் பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு துடியலூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், கொரோனா
 நடிகர்கள் குரலில் விழிப்புணர்வு நடன கலைஞர்கள் தீவிரம்

பெ.நா.பாளையம்:துடியலூர் போலீசார் மற்றும் தமிழ்நாடு திரைப்பட மேடை நடன கலைஞர்கள் நலச் சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.துடியலூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட இடையர்பாளையம், கவுண்டம்பாளையம், துடியலூர் பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு துடியலூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, சமூக இடைவெளி, முக கவசம் அணிதல், அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுதல், தூய்மையை பராமரித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில், தமிழகத்தில் உள்ள பிரபல நடிகர்கள் தொற்று பரவலை கட்டுப்படுத்த, விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டால், எப்படி செயல்படுவார்கள் என்று கூறி அவர்கள் குரலிலேயே பேசி, நடித்து காட்டினர். மேலும், கரடி, விநாயகர் உள்ளிட்ட வேடங்களில் வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறவன், குறத்தி நடனம் ஆடியும் நோயை தடுக்க, பின்பற்ற வேண்டிய செயல்கள் குறித்தும் விளக்கினர். இதை பொதுமக்கள் திரளாக நின்று பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X