களைகட்டும் கலைமகள் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

களைகட்டும் கலைமகள் விழா

Added : அக் 17, 2020
Share
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் சுவாமி விவேகானந்தர் பண்பாடு மற்றும் பாரம்பரிய மையம் சார்பில் கலைமகள் விழா நடக்கிறது.ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா புத்தர் மைதானத்தில், வரும், 24ம் தேதி, ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரி செயலாளர் சுவாமி நிர்மலேஷானந்தர் ஆசியுரை வழங்குகிறார். தொடர்ந்து, வித்யாலயா உயர்நிலைப் பள்ளியின்

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் சுவாமி விவேகானந்தர் பண்பாடு மற்றும் பாரம்பரிய மையம் சார்பில் கலைமகள் விழா நடக்கிறது.ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா புத்தர் மைதானத்தில், வரும், 24ம் தேதி, ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரி செயலாளர் சுவாமி நிர்மலேஷானந்தர் ஆசியுரை வழங்குகிறார். தொடர்ந்து, வித்யாலயா உயர்நிலைப் பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் பக்தி சொற்பொழிவு நடக்கிறது.இரண்டாம் நாள், வித்யாலயா மாணவியரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா பொருளாளர் சுவாமி சஹானானந்தர் ஆசியுரையும் வழங்குகிறார். மூன்றாம் நாளான, 26ம் தேதி நாடகம், நடன வழிபாடு நிகழ்ச்சி நடக்கிறது. இதில், சுவாமி நாராயணானந்தர் பேசுகிறார். மூன்று நாட்களும் மாலை, 6:30 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை,www.srkv.org/live என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X