பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் ததும்பும் தடுப்பணை மகிழ்ச்சியில் விவசாயிகள்

Added : அக் 17, 2020
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:தேரம்பாளையம் தடுப்பணையில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தண்ணீர் நிறைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.காரமடை அடுத்த பெள்ளாதி ஊராட்சியில் மொங்கம்பாளையம், தேரம்பாளையம் ஆகிய இரு இடங்களில், ஏழு எருமை பள்ளத்தில், 15 அடி உயரத்தில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழையால், இரு தடுப்பணைகள் நிரம்பி வழிந்தன.
 தண்ணீர் ததும்பும் தடுப்பணை மகிழ்ச்சியில் விவசாயிகள்

மேட்டுப்பாளையம்:தேரம்பாளையம் தடுப்பணையில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தண்ணீர் நிறைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.காரமடை அடுத்த பெள்ளாதி ஊராட்சியில் மொங்கம்பாளையம், தேரம்பாளையம் ஆகிய இரு இடங்களில், ஏழு எருமை பள்ளத்தில், 15 அடி உயரத்தில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழையால், இரு தடுப்பணைகள் நிரம்பி வழிந்தன. அதன் பிறகு பெய்த மழையால், தடுப்பணையில் தண்ணீர் குறையாமல், நிறைந்து காணப்படுவது விவசாயிகளிடம் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து, தேரம்பாளையம் விவசாயி உதயகுமார் கூறுகையில்,''தேரம்பாளையம் தடுப்பணையில், கடந்த ஆறு மாதங்களாக தண்ணீர் நிறைந்தே உள்ளது. இதனால் சுற்றுப்பகுதியில், 2 கி.மீ., சுற்றளவில் உள்ள, 50க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகள், போர்வெல்களுக்கு நீர் ஊற்று கிடைத்து வருகிறது. ஒவ்வொரு கிணற்றிலும், தண்ணீர் நிறைந்து உள்ளதால், தொடர்ச்சியாக வாழை, கறிவேப்பிலை, மக்காச்சோளம் மற்றும் காய்கறிகளை பயிர் செய்துள்ளனர். இந்த ஆண்டு இப்பகுதி விவசாயிகள், நல்ல முறையில் விவசாயம் செய்து வருகின்றனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X