பழைய ஸ்மார்ட் போன் :போலீசார் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழைய 'ஸ்மார்ட்' போன் :போலீசார் எச்சரிக்கை

Added : அக் 17, 2020
Share
திருப்பூர்:'உரிய ஆவணங்கள் இல்லாமல், பழைய ஸ்மார்ட் போன்களை வாங்க வேண்டாம்,' என போலீசார் அறிவுறுத்தினர்.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக, பழைய மொபைல் மற்றும் ஸ்மார்ட் போன்களை உடனடியாக வாங்கிவிடக்கூடாது. இதற்கான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும். ஏனெனில், அந்த போன்கள், திருடப்பட்டவையாகவோ, தொலைந்தவையாகவோ

திருப்பூர்:'உரிய ஆவணங்கள் இல்லாமல், பழைய ஸ்மார்ட் போன்களை வாங்க வேண்டாம்,' என போலீசார் அறிவுறுத்தினர்.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக, பழைய மொபைல் மற்றும் ஸ்மார்ட் போன்களை உடனடியாக வாங்கிவிடக்கூடாது. இதற்கான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும். ஏனெனில், அந்த போன்கள், திருடப்பட்டவையாகவோ, தொலைந்தவையாகவோ இருக்கலாம்.இதுபோன்று தெரியாமல், பழைய ஸ்மார்ட் போனை வாங்கி வைத்திருப்போரிடம், காவல்துறையினர் தொடர்பு கொள்ளும்போது, அதை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு உரிமை கோரினால், உரிய ஆவணம் இல்லாமல் இருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X