பொது செய்தி

தமிழ்நாடு

'கண் இமைக்கும் நேரத்திலும் கடவுளை மறக்கவே கூடாது'

Added : அக் 17, 2020
Share
Advertisement
பல்லடம்:பல்லடம் அடுத்த சித்தம்பலம் நவக்கிரக கோட்டையில், புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.வழிபாட்டை துவக்கி வைத்து காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் பேசியதாவது:இந்துக்களாகிய நாம் ஒவ்வொருவரும் குலதெய்வ, மற்றும் முன்னோர் வழிபாடு மேற்கொள்ள வேண்டியது அவசியம். வீட்டிலேயோ, அல்லது கோவில்களிலோ முன்னோர் வழிபாடு கட்டாயம் செய்ய
 'கண் இமைக்கும் நேரத்திலும் கடவுளை மறக்கவே கூடாது'

பல்லடம்:பல்லடம் அடுத்த சித்தம்பலம் நவக்கிரக கோட்டையில், புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.வழிபாட்டை துவக்கி வைத்து காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் பேசியதாவது:இந்துக்களாகிய நாம் ஒவ்வொருவரும் குலதெய்வ, மற்றும் முன்னோர் வழிபாடு மேற்கொள்ள வேண்டியது அவசியம். வீட்டிலேயோ, அல்லது கோவில்களிலோ முன்னோர் வழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும். ராமபிரான் மணலை திதி கொடுத்ததாக வரலாறு கூறுகின்றது.கோவில்கள் என்பது வீட்டு பிரச்னைகளை பேசும் இடமல்ல. இறைவன் நாமத்தை மட்டுமே அங்கு சொல்ல வேண்டும். கண்ணிமைக்கும் நேரத்தில் கடவுளை மறக்கக் கூடாது. பிறப்பு இறப்பு என்பது கடவுள் கொடுத்தது. மரணம் என்பது அனைவருக்கும் வரக்கூடியது. ஆனால், அகால மரணம் என்பது வேதனைக்குரியது. இறைவன் நாமத்தால் மட்டுமே, நல்லதொரு நிலையை அடைய முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, அமாவாசையை முன்னிட்டு மஹா ம்ருத்யுஞ்ஜய ேஹாமம், தொடர்ந்து, நவக்கிரகங்கள் மற்றும் மூலவருக்கு தீர்த்த அபிஷேக பூஜையும் நடந்தது. நிறைவாக, சிறப்பு அலங்காரத்துடன் மூலவர் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X