மூக்கையூர் துறைமுகம் வந்த ஆழ்கடல் மீன்பிடி படகுகள்: முழுவீச்சில் செயல்படுகிறது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மூக்கையூர் துறைமுகம் வந்த ஆழ்கடல் மீன்பிடி படகுகள்: முழுவீச்சில் செயல்படுகிறது

Added : அக் 17, 2020
Share
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் மீன்பிடி துறைமுகம் முழுவீச்சில் செயல்பாட்டிற்கு வந்த நிலையில் 24 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் துறைமுகம் வந்தன.மூக்கையூர் துறைமுகம் ரூ.128 கோடியில் 250 ஆழ்கடல் மீன்பிடி படகுகள், 200 நாட்டுப் படகு களை நிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தில் படகுகள் நிறுத்தும் இடத்தில் பாறைகள் இருந்ததால் ஆழ்கடல் மீன்பிடி படகுகளை
 மூக்கையூர் துறைமுகம் வந்த ஆழ்கடல் மீன்பிடி படகுகள்: முழுவீச்சில் செயல்படுகிறது

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் மீன்பிடி துறைமுகம் முழுவீச்சில் செயல்பாட்டிற்கு வந்த நிலையில் 24 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் துறைமுகம் வந்தன.

மூக்கையூர் துறைமுகம் ரூ.128 கோடியில் 250 ஆழ்கடல் மீன்பிடி படகுகள், 200 நாட்டுப் படகு களை நிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தில் படகுகள் நிறுத்தும் இடத்தில் பாறைகள் இருந்ததால் ஆழ்கடல் மீன்பிடி படகுகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

திறப்பு விழா கண்டு ஓராண்டை கடந்தும் துறைமுகம் முழுவீச்சில் செயல்படவில்லை. இதையடுத்து பாறைகள் அகற்றப்பட்டு துறைமுகம் ஆழப்படுத்தப்பட்டது. தற்போது 24 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் இங்கிருந்து தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் துறைமுகம் முழுவீச்சில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

நேற்று 24 ஆழ்கடல் மீன்பிடி படகுகள், 15 இழுவை வலை படகுகள், 110 நாட்டுப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. 15 நாட்களுக்கு பின் திரும்பிய 24 ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் தலா 8 டன் மீன்களுக்கு குறையாமல் கிடைத்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X