தமிழ்நாடு

தீவிரம்: - குமுளி மலைப்பாதையில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

Added : அக் 17, 2020
Share
Advertisement
கூடலுார்: குமுளி மலைப்பாதையில் சேதமடைந்த சிறுபாலங்கள், தடுப்புச்சுவர்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., துார மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாகும். தமிழகம்- கேரளாவை இணைக்கும் முக்கிய பாதையாக இருப்பதால் போக்குவரத்து அதிகம்.

கூடலுார்: குமுளி மலைப்பாதையில் சேதமடைந்த சிறுபாலங்கள், தடுப்புச்சுவர்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., துார மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாகும். தமிழகம்- கேரளாவை இணைக்கும் முக்கிய பாதையாக இருப்பதால் போக்குவரத்து அதிகம். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ‛இ பாஸ்' பெற்று தற்போது சென்று வருகின்றனர். 2016 ல் பலத்த மழையால் ஏற்பட்ட மண்சரிவில் கொண்டை ஊசி வளைவில் சிறுபாலம் சேதமடைந்தது. தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட போதிலும் அப்பகுதியில் மிகக்குறுகலாக இருந்ததால் விபத்து அபாயம் இருந்தது.

இறைச்சல் பாலம் அருகே சிறுபாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு இடிந்துவிழும் நிலையில் காணப்பட்டது. இது தவிர பல இடங்களில் தடுப்புச்சுவர் சேதமடைந்திருந்தது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் வாகனப்போக்குவரத்து குறைவு காரணமாக சிறுபாலம் கட்டுமானப் பணிகளும், தடுப்புச்சுவர்கள் சீரமைப்பு பணிகளும் தேசிய நெடுஞ்சாலைத்துறையால் தீவிரமாக நடந்து வருகிறது. 'இ பாஸ்' பெற்று செல்லும் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரு வழிப்பாதை அமைத்து பணிகள் செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X