சம்பவம் செய்தி

தமிழ்நாடு

20 மொபைல் போன்; 650 ஏக்கர் நிலம்! சொத்துக்களை குவித்த லஞ்ச பொறியாளர்

Updated : அக் 17, 2020 | Added : அக் 17, 2020 | கருத்துகள் (110)
Share
Advertisement
வேலுார்: லஞ்ச புகாரில் சிக்கிய, வேலுார் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர், 650 ஏக்கர் நிலங்களை வாங்கி குவித்துள்ளது தெரிய வந்தது.விசாரணைவேலுார் மாவட்டம், காட்பாடி, காந்தி நகரில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக, இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வம், 51. இவர் மீது வந்த புகார்களை அடுத்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், 13ல் அவரது வீடு
லஞ்சம், பன்னீர்செல்வம், பொறியாளர், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மொபைல், நிலம், சொத்து

வேலுார்: லஞ்ச புகாரில் சிக்கிய, வேலுார் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர், 650 ஏக்கர் நிலங்களை வாங்கி குவித்துள்ளது தெரிய வந்தது.


விசாரணை


வேலுார் மாவட்டம், காட்பாடி, காந்தி நகரில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக, இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வம், 51. இவர் மீது வந்த புகார்களை அடுத்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், 13ல் அவரது வீடு மற்றும் சொகுசு பங்களாவில் சோதனை நடத்தினர். கணக்கில் வராத, 3.25 கோடி ரூபாய், 3.6 கிலோ தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள, 90 சொத்து ஆவணங்களை கைப்பற்றினர்.

இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பன்னீர்செல்வத்தை, மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம், 'சஸ்பெண்ட்' செய்தார். சஸ்பெண்ட் செய்யப் பட்டதால், பன்னீர்செல்வம் நேற்று அலுவலகம் செல்லாமல், வீட்டிலேயே இருந்தார். அவரை யாராவது சந்திக்கின்றனரா என, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

பன்னீர்செல்வம் வெவ்வேறு பெயர்களில், 20 மொபைல் போன்கள் வைத்துள்ளார். போலீசார் அவற்றை கைப்பற்றி, அதில் பேசியவர்கள் குறித்து, விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பன்னீர்செல்வத்திடம் கைப்பற்றிய, சொத்து ஆவணங்களின் மதிப்பை, பத்திரப்பதிவு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதில், வேலுார், ஏலகிரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் மட்டும், 650 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. வங்கி பண பரிவர்த்தனை குறித்தும், விசாரணை நடத்தி வருகின்றனர்.


latest tamil news
கலக்கத்தில் அதிகாரிகள்


அவரது வீட்டில் இருந்து, 'டைரி' ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், அவர் மாதந்தோறும் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விபரம், அவர் எந்தெந்த நிறுவனங்களில் இருந்து, எவ்வளவு லஞ்சம் வாங்கினார் மற்றும் தொடர்பில் உள்ள அரசியல் பிரமுகர்கள் குறித்த விபரங்கள் உள்ளன.இதனால், அவரிடம் லஞ்சம் வாங்கிய உயர் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

மேலும், பன்னீர்செல்வத்துடன் பணியாற்றி வந்த, 21 பேர் மற்றும் பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடக்கிறது. அவர்களது வாக்குமூலம் பதிவு செய்யப் படுகிறது.கடந்த, 13ல் காட்பாடி மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், பங்கேற்ற ஏழு மாவட்ட அதிகாரிகளிடமும் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (110)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dina - chennai,இந்தியா
23-அக்-202020:24:33 IST Report Abuse
dina மாசு கட்டுப்பட்டு வாரியம் என்பதே தேவை இல்லாத ஒன்று. ஏனென்றால் அது ஒரு முழுக்க முழுக்க ஊழல் வாரியம் மாசு கட்டுப்பட்டு வாரியம் என்பதே தேவை எனும் பட்சத்தில் ஆன் லைன் சிஸ்டம் செய்துவிடலாம், யது மட்டும் அல்ல, நில ரஜிஸ்தர் சிஸ்டம் ஆன் லைன் செய்துவிடலாம்,
Rate this:
Cancel
Bernardshaw - Chennai,இந்தியா
23-அக்-202006:04:26 IST Report Abuse
Bernardshaw மாசு கட்டுப்பட்டு வாரியம் என்பதே தேவை இல்லாத ஒன்று. ஏனென்றால் அது ஒரு முழுக்க முழுக்க ஊழல் வாரியம். எந்த கொம்பனை போட்டாலும் இப்படி தான் இருப்பான்.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-அக்-202010:27:58 IST Report Abuse
Malick Raja கப்பம் சரியாக பிரித்து கொடுக்காததால் வந்த வினை .. வேறொன்றும் இல்லை .. இந்தியாவில் 4.5.கோடிபேர் இதைவிட பன்மடங்கில் சொத்துசேர்த்துள்ளார்கள் . அவைகளை அரசுடைமை ஆக்கினாலே போதும் இந்தியா உலகில் முதலாம் இடத்திற்கு வந்துவிடும் .. ஊடகங்கள் ஊசலாடி உண்மையை மறைத்தாலும் உண்மை மறைவதில்லை . மறைக்கவே முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X