பழைய புத்தகங்களை திரும்ப பெற்று புத்தக வங்கி உருவாக்க உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழைய புத்தகங்களை திரும்ப பெற்று புத்தக வங்கி உருவாக்க உத்தரவு

Added : அக் 17, 2020
Share
சேலம்: அரசு பள்ளிகளில், பாடப்புத்தகம் வாங்க வரும் மாணவர்களிடம், கடந்த கல்வியாண்டு புத்தகங்களை திரும்ப வாங்கி, புத்தக வங்கி உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.ஊரடங்கால், நடப்பு கல்வியாண்டில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதேநேரம் நடப்பாண்டு, தனியார் பள்ளிகளிலிருந்து, 20 சதவீதத்துக்கு அதிகமான மாணவ, மாணவியர், அரசு பள்ளிகளுக்கு தாவியுள்ளனர். இதனால், பெரும்பாலான

சேலம்: அரசு பள்ளிகளில், பாடப்புத்தகம் வாங்க வரும் மாணவர்களிடம், கடந்த கல்வியாண்டு புத்தகங்களை திரும்ப வாங்கி, புத்தக வங்கி உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


ஊரடங்கால், நடப்பு கல்வியாண்டில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதேநேரம் நடப்பாண்டு, தனியார் பள்ளிகளிலிருந்து, 20 சதவீதத்துக்கு அதிகமான மாணவ, மாணவியர், அரசு பள்ளிகளுக்கு தாவியுள்ளனர். இதனால், பெரும்பாலான பள்ளிகளில், வழங்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை நிலவுகிறது. தற்போது, இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள், பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த கல்வியாண்டு புத்தகங்களை, அனைத்து மாணவர்களிடமும் திரும்ப பெற்று, பள்ளிகளில் புத்தக வங்கி பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், நல்ல நிலையில் உள்ள புத்தகங்களை மீண்டும் மாணவர்களுக்கு வழங்கவும், மற்றவைகளை இருப்பு வைத்து, பதிவேட்டில் பராமரிக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டே புத்தகங்களை திரும்ப பெற உத்தரவிடப்பட்டது. ஆனால், பெரும்பாலான மாணவர்கள் அவற்றை எடைக்கு போட்டதாக கூறியதால், அவற்றை திரும்ப பெற முடியவில்லை. அதே சமயம், கடந்த ஆண்டு புத்தகம் வழங்கும்போதே, திருப்பி தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, ஏற்கனவே பல பள்ளிகளில், புத்தகங்களை திரும்ப பெற்று, புத்தக வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X