பொது செய்தி

தமிழ்நாடு

வேலூர் கலெக்டர் பெயரில் போலி இமெயில்: அரசு அதிகாரிகளிடம் மோசடி செய்ய முயற்சி

Added : அக் 17, 2020
Share
Advertisement
வேலூர்: வேலூர் மாவட்ட கலெக்டர் பெயரில், போலியான இமெயில் முகவரியை உருவாக்கி, அதன்மூலம் முக்கிய அரசுத்துறை அதிகாரிகளிடம் மோசடி செய்ய முயற்சித்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வேலூர் மாவட்ட கலெக்டர் பெயரிலும் போலியான இமெயில் முகவரியை உருவாக்கிய மர்ம கும்பல், முக்கிய அரசுத் துறை அதிகாரிகளிடம் மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு

வேலூர்: வேலூர் மாவட்ட கலெக்டர் பெயரில், போலியான இமெயில் முகவரியை உருவாக்கி, அதன்மூலம் முக்கிய அரசுத்துறை அதிகாரிகளிடம் மோசடி செய்ய முயற்சித்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


வேலூர் மாவட்ட கலெக்டர் பெயரிலும் போலியான இமெயில் முகவரியை உருவாக்கிய மர்ம கும்பல், முக்கிய அரசுத் துறை அதிகாரிகளிடம் மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வேலூர் மாவட்ட முக்கிய துறை ஒன்றின் அலுவலகத்துக்கு, கடந்த 12ம் தேதி மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் பெயரில் வரப்பெற்ற இமெயிலில் 'எனக்கு உங்களின் உதவி தேவை. விரைவாக பதில் மெயில் அனுப்பவும்' என்று இருந்தது. இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த அதிகாரி, இந்த தகவலை கலெக்டர் சண்முகசுந்தரம் கவனத்துக்கு கொண்டு சென்றார். அது, போலியான இமெயில் முகவரி என்றும், அதற்கு பதில் தகவல் அனுப்ப வேண்டாம் என்று, கலெக்டர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதேபோல், வேறு சிலருக்கும் மின்னஞ்சல் வரப்பெற்ற தகவலை அடுத்து, கலெக்டர் பெயரில் மோசடியில் ஈடுபட முயன்றவர் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் புகார் கடிதம் அனுப்பினார். இதுதொடர்பாக, விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ''போலி இமெயில் முகவரி மூலம் மோசடியில் ஈடுபட முயன்றவர், விரைவில் கைது செய்யப்படுவதுடன் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X