பொது செய்தி

தமிழ்நாடு

கரூர் மாவட்டத்தில் தொடரும் மழை: தடுப்பணையில் தேங்கிய தண்ணீர்

Added : அக் 17, 2020
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்டத்தில் நேற்று, பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. அமராவதி அணையில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர், ஆண்டாங்கோவில் தடுப்பணையில் தேங்கி, ரம்மியமாக காட்சியளிக்கிறது.வெப்ப சலனம் காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில், கடந்த ஐந்து நாட்களாக வெயிலின் தாக்கம், அதிகளவில் இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை, 4:30

கரூர்: கரூர் மாவட்டத்தில் நேற்று, பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. அமராவதி அணையில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர், ஆண்டாங்கோவில் தடுப்பணையில் தேங்கி, ரம்மியமாக காட்சியளிக்கிறது.


வெப்ப சலனம் காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில், கடந்த ஐந்து நாட்களாக வெயிலின் தாக்கம், அதிகளவில் இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை, 4:30 மணிக்கு கரூர் நகரம், திருகாம்புலியூர், செல்லாண்டிபாளையம், ஆண்டாங்கோவில், மண்மங்கலம், வெங்கமேடு, பசுபதிபாளையம், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில், பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால், கரூர் நகரப்பகுதிகளில், தெருக்களில் தண்ணீர் ஓடியது.

அமராவதி அணை நிலவரம்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள, அமராவதி அணைக்கு நேற்று காலை வினாடிக்கு, 233 கன அடி தண்ணீர் வந்தது. ஆற்றில், 1,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. புதிய வாய்க்காலில், 440 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 78.97 அடியாக இருந்தது. அமராவதி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கரூர் அருகே ஆண்டாங்கோவில் தடுப்பணையில் தேங்கியுள்ளது. ரம்மியமாக காட்சியளிக்கும் தடுப் பணையை, சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொது மக்கள் பார்த்து செல்கின்றனர்.


* மாயனூர் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 13 ஆயிரத்து, 627 கன அடி தண்ணீர் வந்தது. காவிரியாற்றில், 12 ஆயிரத்து, 407 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,220 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

ஆத்துப்பாளையம் அணை நிலவரம்: க.பரமத்தி அருகே உள்ள, ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. ஆனால், அணையில் இருந்து, 115 கன அடி தண்ணீர் நொய்யல் வாய்க்காலில் திறந்து விடப்பட்டுள்ளது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 22.30 அடியாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X