இசைக்கு சித்து... சவுண்டுக்கு அபின்...

Added : அக் 17, 2020
Share
Advertisement
‛சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' என சத்தமாக பாட இசை என்ற சத்தம் அவசியம் தேவை இசையும் கடவுள் போல் கண்ணுக்கு தெரியாமல் அற்புதம் செய்வதை புரிந்தவர்களால் மட்டுமே உணர முடியும். இதை புரிதலால், நண்பர்களாகி சென்னையில் ‛புளு' ஆடியோ இன்ஜினியரிங், புரோடக்சன் அகாடமி துவங்கியுள்ளனர் இசையமைப்பாளர் சித்துகுமார் சவுண்ட் இன்ஜினியர் அபின் புஷ்பாகரன்....சித்து மனம்
 இசைக்கு சித்து... சவுண்டுக்கு அபின்...

‛சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' என சத்தமாக பாட இசை என்ற சத்தம் அவசியம் தேவை இசையும் கடவுள் போல் கண்ணுக்கு தெரியாமல் அற்புதம் செய்வதை புரிந்தவர்களால் மட்டுமே உணர முடியும். இதை புரிதலால், நண்பர்களாகி சென்னையில் ‛புளு' ஆடியோ இன்ஜினியரிங், புரோடக்சன் அகாடமி துவங்கியுள்ளனர் இசையமைப்பாளர் சித்துகுமார் சவுண்ட் இன்ஜினியர் அபின் புஷ்பாகரன்....



சித்து மனம் திறக்கிறார்...

எனக்கு சொந்த ஊர் மதுரை. இசை ஆர்வத்தால் இசை கற்று பாலிவுட் படங்களில் வேலை செய்தேன். நீண்ட முயற்சிக்கு பிறகு 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானேன். யோகி பாபுவின் 'டிரிப்', ஹரீஸ் கல்யாண் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறேன்.சென்னையில் ரிக்கார்டிங் தியேட்டர் ஒன்றில் சந்தித்து நானும், அபினும் நண்பர்களாகி அகாடமி துவங்க திட்டமிட்டோம். பல ஆண்டுகள் உழைப்பு, கனவில் 'புளு' ஆரம்பித்தோம். பாடல் கம்போஸ் செய்த பின் அதை சவுண்ட் இன்ஜினியர் தான் மிக்ஸிங் செய்வார். இதற்குரிய படிப்புடன் இசை படிப்பும் இன்டர்நேஷனல் சர்டிபிகேட் உடன் தருகிறோம். நான் இசையமைக்கும் பாடல்களை வைத்தும் மிக்ஸிங் கற்று கொடுப்போம். எங்கள் 'புராஜக்ட்'களிலும் திறமையை காட்ட வாய்ப்பு அளிப்போம், என்றார்.


சவுண்ட் இன்ஜினியர் அபின்:

எனக்கு கேரளா குருவாயூர் சொந்த ஊர். அப்பா புஷ்பாகரன் தபேலா கலைஞராக இருப்பதால் இசை ஆர்வம் வந்தது. ரசூல் பூக்குட்டிக்கு ஆஸ்கார் கிடைத்த பின் தான் சவுண்ட் இன்ஜினியர் படிப்பு இருப்பது தெரிந்தது. கேரளா, சென்னையில் பயிற்சி பெற்ற பின் துபாய் சென்று ஒரு ஆண்டு டி.ஜெ.,வாக இருந்தேன். இசைக்கு சித்து, சவுண்டுக்கு நான் என இருவரும் இணைந்து அகாடமி துவங்கினோம். இசையமைப்பாளர்கள் ஜிப்ரான், சந்தோஷ் நாரயணன், லியான் ஜேம்ஸ், அனிருத் உடன் பணியாற்றியுள்ளேன். சென்னை நாதபிந்து, கிரிம்சன் அவென்யூ ரிக்கார்டிங் ஸ்டுடியோக்களை மறக்க முடியாது. அங்கிருந்து தான் எங்கள் பயணம் துவங்கியது. எங்களை போல் இசை துறையில் பலரை உருவாக்குவதே லட்சியம். தகவல்களுக்கு www.bluacademy.in பார்க்கலாம் என்றார்.

இவர்களை வாழ்த்த 75501 11993க்கு பேசலாம்



ஸ்ரீனி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X