முடிவெடுக்கும் திறன்
ஒருவரின் முடிவெடுக்கும் திறன், அவரது மூளை யின் நரம்பு செல்களின் அடிப்படையில் அமைகிறது என ஜெர்மனியின் பான் பல்கலை ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டது. மனிதர்கள் தினமும் முடிவெடுக்க வேண்டியுள்ளது. ஆண், பெண் என 12 பேர் சோதனையில் பங்கேற்றனர். சாக்லெட், சிப்ஸ் என 2 புகைப்படத்தை காண்பித்து, எது சாப்பிட பிடிக்கும் என கேட்கப்பட்டது. இதே போல 190 ஜோடி படங்கள் காட்டப்பட்டன. அதே நேரம் அவர்களின் மூளை நரம்பு செல்களும் ஆய்வு செய்யப்பட்டன. இதில் முடிவெடுக்கும் திறன், நம்பிக்கை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.
தகவல் சுரங்கம்
எத்தனை பேருக்கு 'நோபல்'
இந்தாண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் முடிந்து விட்டன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் என ஆறு பிரிவுகளையும் சேர்த்து 1901 முதல் 2020 வரை 603 முறை நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. தனிநபர், அமைப்பு என மொத்தம் 962 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சிலர் ஒன்றுக்கு மேல் விருது பெற்றுள்ளதால், இந்த எண்ணிக்கை 955 (தனிநபர் 930, அமைப்புகள் 25) ஆக உள்ளது. தனியாக 352 பேர், 143 விருதுகள் இருவருக்கும், 108 விருதுகள் மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE