அமெரிக்கன் படைப்புழு தாக்குதல்வேளாண் வல்லுநர் குழு ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமெரிக்கன் படைப்புழு தாக்குதல்வேளாண் வல்லுநர் குழு ஆய்வு

Added : அக் 17, 2020
Share
சின்னசேலம்: மக்காச்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் குறித்து வேளாண்துறை மற்றும் வல்லுநர் குழுவினர் சின்னசேலம் சுற்றுவட்டாரத்தில் ஆய்வு பணியை மேற்கொண்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 32,500 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழுக்கள் குறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக

சின்னசேலம்: மக்காச்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் குறித்து வேளாண்துறை மற்றும் வல்லுநர் குழுவினர் சின்னசேலம் சுற்றுவட்டாரத்தில் ஆய்வு பணியை மேற்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 32,500 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழுக்கள் குறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வாழவச்சனுார் வேளாண் கல்லுாரியின் முதல்வர் முத்துகிருஷ்ணன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வேலாயுதம் ஆகியோர் தலைமையில் வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்தனர்.

சின்னசேலம் (வடக்கு), (மேற்கு), மரவநத்தம், வி.பி. அகரம் ஆகிய கிராமங்களில் ஆய்வு செய்தனர். கடந்த காலங்களை காட்டிலும் நடப்பு பருவத்தில் பூச்சி தாக்குதல் குறைவாக உள்ளது எனவும், விவசாயிகளிடையே ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு இருப்பதால் பூச்சி தாக்குதல் அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என வல்லுநர் குழு தெரிவித்தது.மேலும் ஒருங்கிணைந்த பயிர் சாகுபடி முறைகளான வேப்பம் புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ கடைசி உழவின் போது இட வேண்டும். விதை நேர்த்தியாக பவேரியா பேசியானா மருந்தினை 80 கிராம் அளவு 6 கிலோ விதையுடன் கலந்து விதைக்க வேண்டும்.

பூச்சிகளை கண்காணித்து அழிக்கும் பொருட்டு, ஏக்கருக்கு 6 எண்கள் இனக்கவர்ச்சி பொறிகளை வைக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினர்.ஆய்வின் போது, வேளாண்மை துணை இயக்குநர் சுந்தரம், பூச்சியல்துறை பேராசிரியர்கள் துறைசாமி, ஜான்சன், வேளாண் உதவி இயக்குநர் அன்பழகன், வேளாண்மை அலுவலர்கள் நடராஜன், அனுராதா மற்றும் சின்னசேலம் வட்டாரத்தை சேர்ந்த உதவி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X