மதுரை சமூகநலத்துறை அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு சோதனை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை சமூகநலத்துறை அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு சோதனை

Added : அக் 17, 2020
Share
மதுரை : மதுரை கே.கே.நகர் மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் ஜன்னல் வழி வீசப்பட்ட ரூ.23,430 உட்பட கணக்கில் காட்டப்படாத ரூ.31 ஆயிரத்து 130 பறிமுதல் செய்யப்பட்டது. மதுரையில் பெண்களுக்கு அரசு இலவச தையல் இயந்திரங்கள் சமூகநலத்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக இருநாட்களுக்கு முன் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை

மதுரை : மதுரை கே.கே.நகர் மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் ஜன்னல் வழி வீசப்பட்ட ரூ.23,430 உட்பட கணக்கில் காட்டப்படாத ரூ.31 ஆயிரத்து 130 பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரையில் பெண்களுக்கு அரசு இலவச தையல் இயந்திரங்கள் சமூகநலத்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக இருநாட்களுக்கு முன் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.தையல் இயந்திரங்களை உடனடியாக பயனாளிகளுக்கு வழங்குமாறு சமூகநலத்துறை அலுவலர் சாந்திக்கு அறிவுறுத்தப்பட்டது. இதைதொடர்ந்து நேற்றுமுன்தினம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள ஊர்நல அலுவலர்களை அலுவலகத்திற்கு வருமாறு சாந்தி உத்தரவிட்டார்.

இதுதொடர்பான ஆலோசனை கூட்டத்தில் லஞ்சம் கேட்பதாக லஞ்சஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மாலை 6:30 மணிக்கு டி.எஸ்.பி., சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குமரகுரு, சூர்யகலா, மாவட்ட கண்காணிப்பு குழு அலுவலக துணை ஆய்வு குழு தலைவர் திருமலை மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அலுவலக கண்காணிப்பாளர் வாசுகியிடம் இருந்து ரூ.4 ஆயிரம், கிழக்கு ஊராட்சி ஒன்றிய ஊர்நல அலுவலர் தங்கத்திடம் இருந்து ரூ.4500 பறிமுதல் செய்யப்பட்டது. அலுவலக வளாகத்தை சோதனையிட்டபோது ஜன்னல் ஓரத்தில் பணம் இரு கட்டுகளாக வீசப்பட்டிருந்தன. ஒன்றில் ரூ.11,900, மற்றொன்றில் ரூ.11,530 இருந்தது. விசாரணையில் சோதனைக்கு பயந்து ஜன்னல் வழியே பணத்தை வீசியது தெரிந்தது.இரவு 9:30 மணி வரை நடந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத தொகை மொத்தம்ரூ.31,130 பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X