'ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.,வை அசைக்க முடியாது

Updated : அக் 19, 2020 | Added : அக் 17, 2020 | கருத்துகள் (19) | |
Advertisement
பெரியகுளம்: ''தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், ஒன்று அல்ல ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், அ.தி.மு.க.,வை அசைக்க முடியாது,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசினார்.தேனி மாவட்டம், பெரியகுளத்தில் நடந்த, கட்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், அவர் பேசியதாவது:முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், அ.தி.மு.க.,வை வலுவான இயக்கமாகவும், கோட்டையாகவும்
ஸ்டாலின், அ.தி.மு.க., துணைமுதல்வர், பன்னீர்செல்வம்

பெரியகுளம்: ''தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், ஒன்று அல்ல ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், அ.தி.மு.க.,வை அசைக்க முடியாது,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசினார்.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் நடந்த, கட்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், அவர் பேசியதாவது:முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், அ.தி.மு.க.,வை வலுவான இயக்கமாகவும், கோட்டையாகவும் மாற்றியுள்ளனர். 'எனக்கு பின்னாலும் இந்த இயக்கம் நுாறு ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருக்கும்' என, ஜெ., தீர்க்கமாக கூறினார்.



தற்போது கட்சி வலுவாக உள்ளது. கட்சியின் வளர்ச்சிக்கு விசுவாசமிக்க தொண்டர்களாக நாம் செயல்படுவது தான், கட்சிக்கு நாம் செய்யும் நன்றி கடன். கடமையை செய்யுங்கள்; பிரதிபலன் தானாக வந்து சேரும்.வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், சேர்த்தல் பணியில் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து பகுதிகளிலும், ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில், வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு, நாம் தேர்தல் பணியாற்ற வேண்டும். இவ்வாறு, பன்னீர்செல்வம் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
18-அக்-202017:21:55 IST Report Abuse
K.n. Dhasarathan ஸ்டாலினும் வேண்டாம் வேறு யாரும் வேண்டாம், தர்ம யுத்தம் நடத்தி துணை முதல்வர் கொடுத்ததும் அமைதியான தங்கள் ஒருவரே போதும், நல்ல வழிகாட்டி உங்களை போல ஒருவர் போதும், கட்சி அதோகதிதான்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
18-அக்-202016:29:44 IST Report Abuse
sankaseshan என்னடா ஆச்சு திராவிட கட்சிகளுக்கு மக்களை நிம்மதியா இருக்கவிட மட்டுறீங்க இரண்டுபேரும் ஒழிஞ்சு போங்க தமிழ்நாட்டு கு நல்லது நடக்கட்டும்.
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
18-அக்-202015:07:19 IST Report Abuse
Murthy ஸ்டாலின் எதற்கு, நீங்கள் இருவரும் போதுமே அதிமுகவை அடக்கம் செய்வதற்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X