சென்னை வரும் விமானங்களில் அதிகரிக்குது தங்கம் கடத்தல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை வரும் விமானங்களில் அதிகரிக்குது தங்கம் கடத்தல்

Added : அக் 18, 2020 | கருத்துகள் (1)
Share
சென்னை:சென்னைக்கு வரும் விமானங்களில், வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்துவது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் முதல், இதுவரை,25கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.'வந்தே பாரத்'கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால், சரக்கு மற்றும் சிறப்பு விமானங்களை தவிர்த்து, மார்ச், 24 முதல், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவைகள் ரத்து

சென்னை:சென்னைக்கு வரும் விமானங்களில், வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்துவது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் முதல், இதுவரை,25கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

'வந்தே பாரத்'கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால், சரக்கு மற்றும் சிறப்பு விமானங்களை தவிர்த்து, மார்ச், 24 முதல், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப் பட்டன. சில கட்டுப்பாடுகளுடன், மே, 25 முதல், உள்நாட்டு விமானங்கள் இயங்கி வருகின்றன. தற்போது, வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை, 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், சிறப்பு விமானங்களை இயக்கி, மத்திய அரசு மீட்டு வருகிறது.

இந்தச் சூழலிலும், சிறப்பு விமானங்கள் மற்றும் சரக்கு விமான சேவைகளை பயன்படுத்தி, வெளிநாடுகளில் இருந்து, சென்னைக்கு தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது.அத்துடன், போதை பொருட்கள், போதை ஸ்டாம்புகள், வெளிநாட்டு பணம், ஹவாலா பணம், செம்மரக் கட்டைகள் என, அனைத்து விதமான கடத்தல்களும் நடந்து வருகின்றன.

சென்னை விமான நிலையத்தில், ஆகஸ்ட், 4 முதல், நேற்று வரையிலான இரண்டரை மாதத்தில், 40 கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக, 89 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.குறிப்பாக, கடத்தல்காரர்களிடம் இருந்து, ௨௫ கோடி ரூபாய் மதிப்பிலான, 18 கிலோ எடையுள்ள தங்கம், ஹவாலா பணம் மற்றும் போதை பொருட்களை, சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.


சட்ட விரோதம்

கடத்தலில் ஈடுபடும் நபர்கள், தற்போது சிறப்பு விமானங்களை, தங்களது கடத்தலுக்காக பெரிதும் பயன்படுத்தி வருவது, சுங்கத் துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சென்னையில் ஏற்கனவே, கள்ளத் துப்பாகிகளுடன் ரவுடிகள் வலம் வருகின்றனர்; வாரிசு ரவுடிகளும் தங்கள் பங்கிற்கு வாலாட்ட துவங்கி உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து, தங்கக் கடத்தல், போதை பொருட்கள் கடத்தலும் அதிகரித்து வருகிறது.

இத்தகைய நிகழ்வுகளால், சட்ட விரோத பண நடமாட்டம் அதிகரித்து, ரவுடிகள் மட்டுமின்றி, சமூக விரோதிகளின் செயல்பாடும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. சுங்கத் துறையினரும், தமிழக போலீசாரும் சிறப்பு கவனம் செலுத்தி, தங்கக் கடத்தல் மற்றும் சமூக விரோத செயல்பாடுகளை தடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X