போலீசாருக்கு மருத்துவம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாருக்கு மருத்துவம்

Added : அக் 18, 2020
Share
ஆவடி: மருத்துவ விழிப்புணர்வு முகாமில், அம்பத்துார் துணை கமிஷனர், காவலர்களுக்கு மருத்துவம் பார்த்து, அறிவுரை வழங்கினார்.அம்பத்துார் காவல் மாவட்ட காவலர்களுக்கான மருத்துவ விழிப்புணர்வு முகாம், திருமுல்லைவாயலில் நேற்று நடந்தது.இதில், போலீசார், கொரோனா மருத்துவ காப்பீடு திட்டத்தை பயன்படுத்தி பயன்பெற வேண்டும்; பணியின்போது ஏற்படும் மன அழுத்தங்களை தவிர்க்க, உளவியல்
 போலீசாருக்கு மருத்துவம்

ஆவடி: மருத்துவ விழிப்புணர்வு முகாமில், அம்பத்துார் துணை கமிஷனர், காவலர்களுக்கு மருத்துவம் பார்த்து, அறிவுரை வழங்கினார்.

அம்பத்துார் காவல் மாவட்ட காவலர்களுக்கான மருத்துவ விழிப்புணர்வு முகாம், திருமுல்லைவாயலில் நேற்று நடந்தது.இதில், போலீசார், கொரோனா மருத்துவ காப்பீடு திட்டத்தை பயன்படுத்தி பயன்பெற வேண்டும்; பணியின்போது ஏற்படும் மன அழுத்தங்களை தவிர்க்க, உளவியல் ஆலோசனை பெற வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.தொடர்ந்து, போலீசாருக்கு ரத்த அழுத்தம், இதய துடிப்பு பரிசோதனை செய்யப்பட்டது.அப்போது, மருத்துவம் படித்துள்ள, அம்பத்துார் துணை கமிஷனர் தீபா சத்யன், காவலர்களுக்கு பரிசோதனை செய்து, மருத்துவ அறிவுரை வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X