போலீஸ் டைரி| Dinamalar

போலீஸ் டைரி

Added : அக் 18, 2020
Share
மீட்கப்பட்ட முதியவர் பலிமணவாள நகர்: மணவாள நகர் பகுதியில், ரயில் நிலையம் செல்லும் சாலையில் தனியார் ஹோட்டல் அருகே, கடந்த, 13ம் தேதி முதியவர் ஒருவர் மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, போலீசார் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மயங்கி கிடந்த முதியவருக்கு, 70 வயதிருக்கும் என்றும், அவர் நீலக்கலர் சட்டையும்,

மீட்கப்பட்ட முதியவர் பலிமணவாள நகர்: மணவாள நகர் பகுதியில், ரயில் நிலையம் செல்லும் சாலையில் தனியார் ஹோட்டல் அருகே, கடந்த, 13ம் தேதி முதியவர் ஒருவர் மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, போலீசார் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மயங்கி கிடந்த முதியவருக்கு, 70 வயதிருக்கும் என்றும், அவர் நீலக்கலர் சட்டையும், நீலக்கலர் பனியனும், நீலம், சிகப்பு கட்டம் போட்ட லுங்கியும் அணிந்திருந்தார் எனவும், மணவாள நகர் போலீசார் தெரிவித்தனர்.இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த முதியவர், நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து, வி.ஏ.ஓ., ஜெயந்தி அளித்த புகாரையடுத்து, மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.ஆடுகள் திருட்டுமப்பேடு: மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தில், ராஜேந்திரன், 50, என்பவரது வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த மூன்று செம்மறி ஆடுகள் திருடப்பட்டு உள்ளன.இதேபோல், மப்பேடு, நியூ காலனி பகுதியில் காந்தா, 70, என்பவரது வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த, நான்கு செம்மறி ஆடுகள் திருடப்பட்டு உள்ளன.இதுகுறித்து, ராஜேந்திரன், காந்தா ஆகிய இருவரும் அளித்த புகாரையடுத்து, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.வாகனங்கள் பறிமுதல்கடம்பத்துார்: கடம்பத்துார் அடுத்த, வைசாலி நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக பேஷன் புரோ டூ - வீலரை ஓட்டி வந்த நபர், போலீசாரை கண்டதும், வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடினார்.கடம்பத்துார் போலீசார், டூ - வீலரை பறிமுதல் செய்த போது, மணல் மூட்டைகள் கடத்தி வந்தது தெரிந்தது.'இதேபோல், வெள்ளவேடு அடுத்த, ஜமீன் கொரட்டூர் பகுதியில், வெள்ளவேடு போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, டாடா மேஜிக் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த நபர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பியோடினர்.போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து சோதனை செய்தபோது மூன்று மூட்டை மணல் கடத்தி வந்தது தெரிந்தது.இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X