7 மாதமாக மூடப்பட்ட சுற்றுலா மையங்கள்! வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

7 மாதமாக மூடப்பட்ட சுற்றுலா மையங்கள்! வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள்

Added : அக் 18, 2020 | கருத்துகள் (1)
Share
ஊட்டி;நீலகிரி மாவட்டத்தில், ஏழு மாதங்களாக பல சுற்றுலா மையங்கள் மூடப்பட்டுள்ளதால், சிறு வியாபாரிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில், கொரோனோ பாதிப்பு காரணமாக, சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கடந்த மாதம், ஊட்டி, குன்னுாரில் உள்ள தோட்டக்கலை துறைக்கு சொந்தமான, தாவரவியல் பூங்காக்கள் மட்டும் திறக்கப்பட்டு, 'இ-பாஸ்' அடிப்படையில்,
 7 மாதமாக மூடப்பட்ட சுற்றுலா மையங்கள்! வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள்

ஊட்டி;நீலகிரி மாவட்டத்தில், ஏழு மாதங்களாக பல சுற்றுலா மையங்கள் மூடப்பட்டுள்ளதால், சிறு வியாபாரிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில், கொரோனோ பாதிப்பு காரணமாக, சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கடந்த மாதம், ஊட்டி, குன்னுாரில் உள்ள தோட்டக்கலை துறைக்கு சொந்தமான, தாவரவியல் பூங்காக்கள் மட்டும் திறக்கப்பட்டு, 'இ-பாஸ்' அடிப்படையில், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.குன்னுார் லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் சுற்றுலா மையங்கள் திறக்கப்படவில்லை. இந்த பகுதியில் சுற்றுலாவை நம்பி, நீலகிரி தைல உற்பத்தி தொழிற்சாலைகள், சிறு கடைகளில் பணியாற்றிய, 700 பேர் வரை சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.கோத்தகிரி கோடநாடு காட்சி முனை மூடப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் வர முடியாத நிலை உள்ளது. ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், பைன் சோலை, தொட்டபெட்டா போன்ற பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் அனுமதி இல்லாததால், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.சிறு வியாபாரிகள் கூறுகையில்,'மாவட்டம் முழுவதும், சுற்றுலா மையங்கள் மூடப்பட்டதால், 200 நாட்களாகியும் வேலையில்லை. இங்குள்ள, பல்லாயிரம் வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். பூங்காக்களை திறந்ததை போன்று, விதிமுறைகளுக்கு உட்பட்டு, பிற சுற்றுலா மையங்களையும் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என்றனர்.மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறுகையில்,'முதற்கட்டமாக, தோட்டக்கலை துறை பூங்காக்கள் திறக்கப்பட்டு, மிகவும் குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அரசின் உத்தரவு வந்தால், பிற சுற்றுலா மையங்களை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்' என்றனர்.வனத்துறைக்கு நிதி நெருக்கடிமுதுமலை புலிகள் காப்பகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை, வாகனங்கள் மற்றும் யானை சவாரி மூலம் வனப்பகுதிக்கு அழைத்து சென்று வருகின்றனர். சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, 6.85 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக, மார்ச் 15 முதல் முதுமலை மூடப்பட்டு, சுற்றுலா பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. வனத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு, நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X