ஆன்லைன் பட்டா மாறுதல்: விரைந்து முடிக்க உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' பட்டா மாறுதல்: விரைந்து முடிக்க உத்தரவு

Added : அக் 18, 2020
Share
திருப்பூர்:'ஆன்லைன்' பட்டா மாறுதல் விண்ணப்பம் மீது விரைந்து தீர்வு காண நிலவரி திட்டத் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.பொதுமக்கள், தங்கள் நிலத்தை உட்பிரிவுக்காக, பட்டா பெயர் மாற்றம் கேட்டு விண்ணப்பிக்கின்றனர். மனுவின் மீது, 30 நாளில், சான்று அளிக்க வேண்டும். ஆனால், சர்வே துறையில் பணியாற்றும் ஊழியர்கள், சரிவர இப்பணியை மேற்கொள்வதில்லை.இதனால், 'ஆன்லைன்' பட்டா

திருப்பூர்:'ஆன்லைன்' பட்டா மாறுதல் விண்ணப்பம் மீது விரைந்து தீர்வு காண நிலவரி திட்டத் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.பொதுமக்கள், தங்கள் நிலத்தை உட்பிரிவுக்காக, பட்டா பெயர் மாற்றம் கேட்டு விண்ணப்பிக்கின்றனர். மனுவின் மீது, 30 நாளில், சான்று அளிக்க வேண்டும். ஆனால், சர்வே துறையில் பணியாற்றும் ஊழியர்கள், சரிவர இப்பணியை மேற்கொள்வதில்லை.இதனால், 'ஆன்லைன்' பட்டா மாறுதல் மற்றும் நில அளவை விண்ணப்பம் மீது விரைந்து தீர்வு காண வேண்டுமென, நில அளவை மற்றும் நிலவரித் திட்டத் துறை இயக்குனர் செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக, அவர் அனுப்பிய சுற்றறிக்கையில், 'தமிழகத்தில், கொல்லிமலை மற்றும் வால்பாறை தாலுகா நீங்கலாக, பிற தாலுகாக்களில் ஆன்லைன் பட்டா மாறுதல் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. எனவே, ஆன்லைன் விண்ணப்பம் மீது உடனே தீர்வு காண வேண்டும். எந்தவொரு தாமதமின்றி, நில அளவை பணியை விரைந்து முடிக்க வேண்டும்' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X