பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்கள் 750 பேர் 'நீட்' தேர்வில் தேர்ச்சி

Updated : அக் 18, 2020 | Added : அக் 18, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
. சென்னை: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில் தமிழக அரசு பள்ளிகளில் மொத்தம் 1623 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றுள்ளனர்.அவர்களில் 90 மாணவர்கள் 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். நான்கு மாணவர்கள் 500க்கு மேல் பெற்றுள்ளனர். 71 பேர் 300 முதல் 400 வரை பெற்றுள்ளனர். 15 பேர் 400 முதல் 500க்குள் மதிப்பெண் பெற்றுள்ளனர்.இவர்களில்

. சென்னை: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில் தமிழக அரசு பள்ளிகளில் மொத்தம் 1623 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றுள்ளனர்.latest tamil news


அவர்களில் 90 மாணவர்கள் 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். நான்கு மாணவர்கள் 500க்கு மேல் பெற்றுள்ளனர். 71 பேர் 300 முதல் 400 வரை பெற்றுள்ளனர். 15 பேர் 400 முதல் 500க்குள் மதிப்பெண் பெற்றுள்ளனர்.இவர்களில் 750 பேர் அரசு பள்ளி மாணவர்கள். மற்றவர்கள் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள். கோவை கிருஷ்ணம்மாள் பள்ளி மாணவி வாசுகி 580; காஞ்சிபுரம் செயின்ட் ஜோசப் மாணவர் சக்திவேல் 552; நவீன்குமார் 527 மதிப்பெண் பெற்றுள்ளனர்.அரசு பள்ளிகளில் படித்த மாற்று திறனாளி மாணவர்கள் 35 பேருக்கு பள்ளி கல்வி இயக்குனரகமும், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லுாரி முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து பயிற்சி அளித்தன. அதில் மூன்று பேர் தேர்ச்சி மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களில் திருவள்ளூர் கண்டிகை அரசு பள்ளி மாணவர் கிஷோர்குமார் 201 மதிப்பெண் பெற்று மாற்று திறனாளி பிரிவில் அகில இந்திய அளவில் 1113ம் இடம் பெற்றுள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு அமலானால் இவர்களில் பலருக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பயிற்சி மையமின்றி அசத்திய மாணவர்அரசு பள்ளி மாணவர்களில் பெரும்பாலானவர்கள் அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தனியார் பயிற்சி வழியாகவும், ஆசிரியர்கள் மற்றும் தனியார் அமைப்புகள் அளித்த பயிற்சி வழியாகவும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


latest tamil news


ஆனால் அரக்கோணத்தை சேர்ந்த சக்திவேல் என்ற மாணவர் எந்த பயிற்சி வகுப்புக்கும் செல்லாமல் 674 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.இவர் 10ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து விட்டு பிளஸ் 1 பிளஸ் 2 மட்டும் தனியார் பள்ளியில் முடித்துள்ளார். பின் ஓராண்டு வீட்டிலேயே தினமும் 10 மணி நேரம் வரை படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velu Karuppiah - Chennai,இந்தியா
18-அக்-202019:06:36 IST Report Abuse
Velu Karuppiah டியர் சுப்பன் உங்கள் ஓட்டப்பந்தய உதாரணம் எங்கு சரிப்படும் என்றால் ஒரே தரத்தில் உள்ளவர்களிடையே நடக்கும் போட்டிக்குத்தான் . அனால் இங்கு நடப்பது வெவ்வேறு பாட திட்டத்தில் படிப்பவர்கள் மட்டும் அல்ல கிராமப்புற மாணவர்கள் எந்த ஒரு அடிப்படை வசதி இல்லாமல் படிப்பவர்களை நகரத்தில் சகல வசதிகளுடன் படிக்கும் மாணவர்களோடு போட்டி போட்டு ஜெயிக்க சொன்னால் எப்படி நேர்மையான போட்டியாக கருதமுடியும்.
Rate this:
Suppan - Mumbai,இந்தியா
18-அக்-202021:06:01 IST Report Abuse
Suppanஅறிவியல் பாடங்களில்தானே நீட் கேள்விகள் வருகின்றன. அறிவியல் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுமா என்ன? தரம் குறைந்த பாடத்திட்டம், தரமற்ற ஆசிரியர்கள், வசதி குறைந்த பள்ளிகள் இவைகளுக்கு காரணம் கடந்த அரசுகளும் இப்பொழுதுள்ள அரசும் தானே ? போதாக்குறைக்கு தற்கொலைகளைத் தூண்டிவிட்டு பிண அரசியல் நடத்தும் கயவர்கள்....
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
18-அக்-202017:36:00 IST Report Abuse
M  Ramachandran மாணவர்களின் முழு கருத்து சுதந்திரத்துடன் கல்வி கொள்கை அரசியல் தலைவர்கள் அலச வேண்டும். பிற்காலத்தில் அவர்கள்தான் நாடு முன்னேறவேண்டும். அரசில் குறிகிய நோக்கத்துக்காக அவர்களை பாழ்படுத்த கூடாது. அவர்கள் போட்டிபோட்டு மற்ற நாட்டு மாணவர்களுடன் முன்னேற வேண்டும்.வாழ்க தமிழ் நாடு வாழ்க நம்ம இந்தியா நாடு.
Rate this:
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
18-அக்-202017:32:15 IST Report Abuse
Apposthalan samlin நீட் தேர்வில் பாசாகிறது முக்கியம் கிடையாது எதனை பேருக்கு படிப்பதற்கு சீட் கிடைக்கிறது என்று சொல்லுங்கள் நீட் தேர்வில் பாசாவதற்கு நூற்றி முப்பது மார்க் போதும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X