திங்கள் முதல் ஞாயிறு வரை (19.10.2020 - 25.10.2020) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.
மேஷம்
சந்திரன், சுக்கிரன், குரு சாதக நிலையில் உள்ளனர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.
அசுவினி: குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணவரவு அதிகரிக்கும். நம்பிக்கையுடன் உங்கள் பணிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும்.
பரணி: உற்றார், உறவினர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். வியாபாரிகளுக்கு நிலுவைத் தொகைகள் வசூலாகும். எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
கார்த்திகை 1: குடும்பத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சுபச்செய்தி உண்டு. தொழிலில் புதிய முதலீடுகளை செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் : 19.10.2020 அதிகாலை 5:28 - 21.10.2020 காலை 8:33 மணி
ரிஷபம்

புதன், குரு, சுக்கிரன் நன்மை தரும் அமைப்பில் உள்ளனர். லலிதாம்பிகை வழிபாடு சகல நன்மை தரும்.
கார்த்திகை 2,3,4: புண்ணியச் செயல்களில் ஈடுபடுவீர்கள். மனஅழுத்தம் மறையும். சிந்தனையில் தெளிவு உண்டாகும். உடன்பிறந்தோர், நண்பர்களால் நன்மை அடைவீர்கள். புதிய சொத்துகள் வாங்குவீர்கள்.
ரோகிணி: தோற்றத்தில் பொலிவு உண்டாகும். புத்திசாலிகளின் நட்பைப் பெற்று பலனடைவீர்கள். மன உறுதி உண்டாகும். கவலைகள் மறைந்து மகிழ்ச்சி பிறக்கும்.
மிருகசீரிடம் 1,2: ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரங்கள் சூடுபிடிக்கும். பயணங்கள் மேற்கொள்வீர்கள். சேமிப்பில் முன்னேற்றம் காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
சந்திராஷ்டமம் : 21.10.2020 காலை 8:34 - 23.10.2020 பகல் 1:13 மணி
மிதுனம்
செவ்வாய், குரு, புதன் தாராள நன்மைகளை வழங்குவர். அனுமன் வழிபாடு வெற்றி தரும்.
மிருகசீரிடம் 3,4: பெற்றோர், நண்பர்கள் வழியில் ஏற்பட்ட மன வருத்தங்கள் நீங்கும். குறைந்த அளவு முதலீட்டில் அதிக லாபத்தை அள்ளுவீர்கள். எண்ணங்களுக்கு தகுந்த செயல் வடிவம் கொடுப்பீர்கள்.
திருவாதிரை: உடல் உபாதைகள் இந்த வாரம் தீரும். வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல் தந்த செயல்கள் நல்லபடியாக முடியும்.
புனர்பூசம் 1,2,3: நீண்ட நாள் பிரச்னை இந்த வாரம் முடிவுக்கு வரும். உயர்ந்தவர்களின் நட்பைப் பெறுவீர்கள். விரும்பிய வீட்டிற்கு குடி பெயர்வீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் : 23.10.2020 பகல் 1:14 மணி - 25.10.2020 நாள் முழுவதும்
கடகம்
சுக்கிரன், செவ்வாய், குரு அதிர்ஷ்டகர பலன்களை தருவர். குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.
புனர்பூசம் 4: கடனாக கொடுத்திருந்த பணம் கைக்கு வந்துசேரும். வேலைகளை குறித்த காலத்திற்குள் முடிப்பீர்கள். பெண்கள் பாராட்டு பெறுவர். உங்கள் மீது வீண்பழி ஏற்படாதவாறு காக்கப்படுவீர்கள்.
பூசம்: களவுபோன பொருட்கள் திரும்ப கிடைக்கும். உறுதியின்றிச் செய்த வேலைகளில் பிடிப்பு ஏற்படும். பணியாளர்கள் நிலுவைப் பணிகளை முடிப்பீர்கள்.
ஆயில்யம்: பயந்த விஷயம் வெற்றிகரமாக முடியும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். மேலதிகாரி ஆதரவாக செயல்படுவார். சகபணியாளரிடம் கவனமாகப் பழகுவது நல்லது.
சிம்மம்
குரு, புதன், ராகு அபரிமித நற்பலன்களை வழங்குவர். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
மகம்: பதவி உயர்வு உங்களைத் தேடி வரும். பொறுமையுடன் செயல்பட்டு உங்களுக்கு எதிரான சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னை ஒன்றிற்கு தீர்வு கிடைக்கும்.
பூரம்: சகஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் மன அமைதி உண்டு. புதிய சந்தோஷங்களை நாடிச் செல்வீர்கள். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் சிரமங்கள் உண்டாகாது.
உத்திரம் 1: சமூகத்தில் உங்ளது அந்தஸ்து உயரும். உங்களின் முயற்சிகள் வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் செல்லும். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருக்கும்.
கன்னி
குரு, கேது, சந்திரன் நலமளிப்பர். மீனாட்சி வழிபாடு சுபிட்சம் தரும்.
உத்திரம் 2,3,4: உறவினர்களுக்காக செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சியான செய்திகள்
வந்து சேரும்.
அஸ்தம்: பிறரிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். கணவரின் உறவினர்களோடு வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். இளைஞர்களுக்கு நினைவாற்றலும், அறிவாற்றலும் பெருகும்.
சித்திரை 1,2: வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. எதிர்கால திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். பெற்றோர் ஆதரவுடன் சிறு சாதனைகளை செய்வீர்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரிப்பதால் நிம்மதி
பெருகும்.
துலாம்
சுக்கிரனும், சந்திரனும் நற்பலன்களை அருள்வர். சிவன் வழிபாடு சிரமத்தை போக்கும்.
சித்திரை 3,4: சந்தோஷம் கூடும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்து கொள்வீர்கள். குடும்பத்தலைவர்கள் எடுத்த முயற்சிகள் கைகூடும். இடம், வீடு வாங்கும் யோகமுண்டு. திட்டமிட்டவை
கைக்கூடும்
சுவாதி: நட்பு வட்டம் விரிவடையும். பொருளாதார நிலை உயரும். வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்வீர்கள். குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள். பெண்கள் அத்தியாவசிய பொருட்கள்
வாங்குவர்.
விசாகம் 1,2,3: முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். உடல்நலம் மேம்படும். உத்தியோக மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.
விருச்சிகம்
குரு, புதன், சந்திரன் சாதகமாக அமர்ந்துள்ளனர். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.
விசாகம் 4: பயணங்கள் சிறப்பாக அமையும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி குறையும். சகஊழியர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவர். பூர்வ சொத்தினால்
செலவு ஏற்படும்.
அனுஷம்: யோசித்து செயல்பட வேண்டிய தருணம். பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனப் பழுது செலவினால் கையிருப்பு குறையலாம். உங்களது கம்பீரமான போக்கால் பிரச்னைகளை சமாளிப்பீர்கள்.
கேட்டை: கண்டிப்பான போக்கினால் உங்கள்மீது பயம்கூடும். நேரத்தின் அருமையை உணர்ந்து செயல்படுவீர்கள். மனைவி நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். நண்பர்கள் நல்ல செய்தியை
கொண்டு வருவர்.
தனுசு
சுக்கிரன், புதன், சந்திரன் நற்பலன் தருவர். துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.
மூலம்: எதிலும் சிக்கனமாக இருப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வரும். வியாபாரிகளுக்கு முந்தைய சேமிப்பு இப்போது கைகொடுக்கும். தெய்வ வழிபாடு மனஅமைதி தரும்.
பூராடம்: எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பொருளாதார நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். பிறரை நம்பி வாக்குறுதி, முன் ஜாமீன் கொடுக்க வேண்டாம்.
உத்திராடம் 1: உடல்நலம் சீராகி ஆனந்தப்படுத்தும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க அலைச்சல்களை சந்திப்பீர்கள். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும்.
மகரம்
சுக்கிரன், புதன், சந்திரன் அனுகூல பலன்களை அருள்வர். பெருமாள் வழிபாடு நல்வாழ்வு தரும்.
உத்திராடம் 2,3,4: நெருங்கியவர்களுக்கு உதவி செய்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தினருடன் சிறு கருத்து வேறுபாடு வரக்கூடும். அமைதியாக இருப்பது நல்லது. திட்டமிட்டவை கைக்கூடும்.
திருவோணம்: பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானம் தேவை. வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
அவிட்டம் 1,2: வெளிநாடு செல்லும் முயற்சி சிறு தடைகளுக்கு பிறகே நிறைவேறும். உங்களது பெயர், புகழை நிலைநிறுத்திக் கொள்வீர்கள். எதிர்பாராத நன்மைகள் வந்தடையும். பெரியோரின் ஆசி கிடைக்கும்.
கும்பம்
குரு, சனி, சந்திரன் நன்மைகளை வழங்குவர். ராமர் வழிபாடு நிம்மதி அளிக்கும்.
அவிட்டம் 3,4: வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். செலவு அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளை அதிகம் கட்டுப்படுத்த வேண்டாம்.
சதயம்: மேற்கொள்ளும் பணிகளில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். பெண்களுக்கு உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றலாம். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர்.
பூரட்டாதி 1,2,3: பொருளாதார நிலை ஓரளவு சீராக இருக்கும். கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்பு நழுவாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வார்கள்.
மீனம்
சுக்கிரன், சந்திரன், புதன் உதவி செய்யும் அமைப்பில் உள்ளனர். சாஸ்தா வழிபாடு துன்பம் போக்கும்.
பூரட்டாதி 4: செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். பொதுவாழ்வில் பொறுப்புகள் வந்து சேரலாம். நம்பியவர்களே ஏமாற்றமளிக்கக்கூடும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்க முடியாமல் போகலாம்.
உத்திரட்டாதி: பயணம் சிறிதளவே பலன் தரும். சமீபத்திய அனுபவங்களால் சொத்து சம்பந்தமான முதலீடுகளில் ஆர்வம் குறையும். தொழிலில் இருந்த மெத்தனப் போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். செல்வநிலை உயரும்.
ரேவதி: எதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் வெற்றி அடையலாம். விளையாட்டு போட்டிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் சிரமங்கள் வர வாய்ப்புள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE