உலகின் உயரமான யானை செங்களூர் ரங்கநாதன்

Updated : அக் 18, 2020 | Added : அக் 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
அழகிய பரந்த நெற்றிநிலத்தை தொடும் தும்பிக்கைதேன்நிறக் கண்கள்கம்பீரமே உருவெடுத்தது போன்ற உயரமான தோற்றம்இதெல்லாம்தான் செங்களூர் ரங்கநாதனின் கவுரமான அடையாளங்கள்யார் இந்த செங்களூர் ரங்கநாதன் திருச்சியை அடுத்துள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பெருமானுக்கு சேவை செய்வதற்காக குட்டியாக இருந்த போது வந்த யானை.இங்கு வந்த காரணத்தினால் இதற்கு ரங்கநாதன்
latest tamil news
அழகிய பரந்த நெற்றி

நிலத்தை தொடும் தும்பிக்கை

தேன்நிறக் கண்கள்

கம்பீரமே உருவெடுத்தது போன்ற உயரமான தோற்றம்

இதெல்லாம்தான் செங்களூர் ரங்கநாதனின் கவுரமான அடையாளங்கள்

யார் இந்த செங்களூர் ரங்கநாதன்


latest tamil newsதிருச்சியை அடுத்துள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பெருமானுக்கு சேவை செய்வதற்காக குட்டியாக இருந்த போது வந்த யானை.இங்கு வந்த காரணத்தினால் இதற்கு ரங்கநாதன் என்று பெயரிடப்பட்டது.

அன்றாடம் காவிரி நதியில் இருந்து ரங்கநாதன் கொண்டு வரும் கலச நீரில்தான் பெருமாளுக்கு அபிேஷகம் நடக்கும்.நாளடைவில் ரங்கநாதனின் வளர்ச்சி வழக்கமான யானைகளின் வளர்ச்சியை விட அசாதாரணமாக இருந்தது.ஒரு கட்டத்தில் 11அடி4 அங்குலம் கொண்டு அதாவது 345 செ.மீ உயரத்துடன் மிக கம்பீரமாக காணப்பட்டது.(ஆப்பிரிக்கா யானையாக இருந்தால் 11 அடியும் இந்திய யானையாக இருந்தால் 10.7 அடி உயரம்தான் இதுவரை உள்ள ரிக்கார்ட்)

ஆனால் அதன் அசாதாரண உயரமே இதற்கு எதிரியாகவும் அமைந்துவிட்டது.கோயிலின் குறுகிய வாசல் வழியாக கலச நீருடன் போய் வருவதற்கு மிகவும் சிரமப்பட்டது.கருங்கற்களில் உடம்பு உராய்ந்ததால் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டது.


latest tamil newsஒரு கட்டத்தில் ரங்கநாதனை பராமரிக்க முடியாது என்ற நிலையில்,‛யானை விற்பனைக்கு' என ஆங்கில நாளிதழ் ஒன்றில் விளம்பரம் கொடுத்தனர்.இந்த விளம்பரத்தைப் பார்த்த கேரளா மாநிலம் செங்களூரைச் சேர்ந்த பரமேஸ்வரன் நம்பூதிரி என்பவர் யானையை 1500 ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றார்.

இது நடந்த ஆண்டு 1905 ஆகும்.ரங்கநாதனை தனது சொந்த ஊரான செங்களூர் அழைத்துச் சென்று அதற்கு சத்தான உணவு கொடுத்து பராமரித்தார்.கொஞ்ச நாளில் ரங்கநாதன் மிகவும் போஷாக்கு பெற்றதுடன் உற்சாகமும் மிகக்கொண்டது.

இதை அடுத்து 1906 ம் ஆண்டு நடைபெற்ற திருச்சூர் ஆடிப்பூரம் திருவிழாவிற்கு ரங்கநாதனைக் கொண்டுவந்து நம்பூதிரிகள் நிறுத்தினார்,ரங்கநாதன் வந்து நின்றதும் பக்கத்தில் நின்றிருந்த மற்ற யானைகள் எல்லாம் குழந்தை போலாகிவிட்டது காரணம் ரங்கநாதனின் அசாத்தியமான உயரம்.

இதைப் பார்த்த மக்கள் ஆர்ப்பரித்து ரங்கநாதனை கொண்டாடினர்.அதன்பிறகு 1914 ம் ஆண்டு வரை ரங்கநாதன்தான் யானைகளின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தது.உயரமான ரங்கநாதனில் புகழ் உலகமெங்கும் பரவியதை அடுத்து பல ஆயிரம் பேர் அடுத்தடுத்து நடைபெற்ற பூரம் திருவிழாவில் ரங்கநாதனைப் பார்ப்பதற்காகவே பங்கேற்றனர்.


latest tamil newsஇந்த சூழ்நிலையில் 1914 ம் ஆண்டு ஒரு மோசமான சம்பவம் நடந்தது.யானைகளுக்கு இடையே நடைபெற்ற திடீர் மோதலில் கோவிந்தன் என்ற யானை தாக்கி ரங்கநாதன் கடுமையான காயமடைந்தது.எவ்வளவோ சிகிச்சை கொடுத்தும் பலன் இல்லாமல் 1917 ம் ஆண்டு ரங்கநாதன் இறந்தது.

ரங்கநாதனின் உயரம் ஒரு அதிசயம் என்பதால் அப்போதைய பிரிட்டிஷ் அரசு ரங்கநாதனின் எலும்புக்கூட்டை லண்டன் மியூசியத்தில் வைக்க விரும்பி ரங்கநாதனை ரசாயணம் தடவி மண்ணில் புதைத்தது.ஆறு மாதம் கழித்து குழியைத் தோண்டிப் பார்த்த போது சதைப்பகுதி எல்லாம் மக்கி மறைந்து போய் எலும்புகள் மட்டும் மிஞ்சியிருந்தது.

அதை எல்லாம் கோர்த்து நிமிர்த்த போது ரங்கநாதன் மீண்டும் உயிர்பெற்று எழுந்து நிற்பது போன்ற உணர்வு ரங்கநாதனைப் பார்த்தவர்கள் பழகியவர்களுக்கு ஏற்பட்டது.ரங்கநாதன் எங்களிடமே இருக்கட்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டதன் காரணமாக கடைசி நேரத்தில் லண்டன் மியூசியம் செல்வது தவிர்க்கப்பட்டு தற்போது கேரளா மாநிலம் திருச்சூர் அருங்காட்சியகத்தின் பிரதான ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.

-எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rathnavel Kandhaswami - Chennai,இந்தியா
23-அக்-202013:05:25 IST Report Abuse
Rathnavel Kandhaswami ரங்கா ரங்கா மனம் நெகிழ்ந்தது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X