வந்தேன்டா... நான் விவசாயி அண்ணாமலை (மாஜி) ஐ.பி.எஸ்

Added : அக் 18, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என அரசு துறைகளில் உயர் அதிகாரிகளாக பணிபுரிந்து அரசியலில் நுழைந்து பலர் சாதித்துள்ளனர். பலர் சாதித்து வருகின்றனர். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய முதல் முறையிலேயே வெற்றி பெற்று ஐ.பி.எஸ்., அதிகாரியாக சேர்ந்து ஒன்பதாண்டுகளில் 'கர்நாடகா சிங்கம்' என பெயர் பெற்று, 37 வயதில் பா.ஜ.,வில் இணைந்து அரசியல் பயணத்தை துவக்கியிருக்கிறார் கரூர் சின்னதாராபுரம்
விவசாயி, அண்ணாமலை, ஐபிஎஸ்,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என அரசு துறைகளில் உயர் அதிகாரிகளாக பணிபுரிந்து அரசியலில் நுழைந்து பலர் சாதித்துள்ளனர். பலர் சாதித்து வருகின்றனர். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய முதல் முறையிலேயே வெற்றி பெற்று ஐ.பி.எஸ்., அதிகாரியாக சேர்ந்து ஒன்பதாண்டுகளில் 'கர்நாடகா சிங்கம்' என பெயர் பெற்று, 37 வயதில் பா.ஜ.,வில் இணைந்து அரசியல் பயணத்தை துவக்கியிருக்கிறார் கரூர் சின்னதாராபுரம் தொட்டம்பட்டியை சேர்ந்த அண்ணாமலை. இயற்கை விவசாயி, தன்னம்பிக்கை பேச்சாளர், சிறந்த எழுத்தாளர், தொழில்முனைவோர் என அவரின் பல பரிமாணங்கள் பலரது பாராட்டுதல்களை பெற்றுள்ளது. சமீபத்தில் மதுரை இம்மையின் நன்மை தருவார் கோயிலில் தரிசனம் செய்ய வந்தவருடன் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசியதிலிருந்து...


விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ஐ.பி.எஸ்., ஆனதுகோவை பி.எஸ்.ஜி.,கல்லுாரியில் மெக்கானிக்கல் பி.இ., முடித்தேன். லக்னோ இந்திய மேலாண்மை கழகத்தில் எம்.பி.ஏ., முடித்தேன். அங்கு படித்த போது உ.பி.,மாநிலத்தில் வறுமை, சட்டம் ஒழுங்கு பிரச்னையை கண்டு இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய உந்துதலை ஏற்படுத்தியது. அதன்படி சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி முதல் முயற்சியிலேயே ஐ.பி.எஸ்., கிடைத்தது.


ஐ.பி.எஸ்., ஆக சாதித்ததுகர்நாடகா கர்தாலகா, உடுப்பி உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்தேன். ஹிந்து, முஸ்லீம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தது, சிக்மகளூரில் ஏழு நக்சைலட்களை சரணடைய வைத்தது, மெரோக்கோ சென்று குற்றவாளியை கைது செய்து கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. சி.பி.ஐ., தவிர்த்து இந்தியன் போலீஸ் வெளிநாடு சென்று குற்றவாளியை கைது செய்தது அதுதான் முதல் முறை.


பிறகு ஏன் ராஜினாமாஓரிடத்தில் இருக்காமல் ஓடை போல இருக்க விரும்பினேன். விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் நான். போலீஸ் துணை கமிஷனர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊரில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டேன். கால்நடை பண்ணை, கோழி வளர்ப்பு என ஒன்றையும் விடவில்லை. 'வி த லீடர்' அமைப்பை ஏற்படுத்தி இளைஞர்களின் ஆற்றலை மேம்படுத்த துவங்கினேன். இந்த அமைப்பு மூலம் கல்வி, மருத்துவம், முக்கிய பிரச்னைகளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து செல்வது என பல்வேறு நோக்கங்கள் உண்டு.


பா.ஜ.,வில் இணைந்தது ஏன்


நாட்டில் உள்ள கட்சிகள் அனைத்தும் தனிமனித சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டுள்ளன. ஆனால் பா.ஜ.,வில் தனி மனித சித்தாந்தம் கிடையாது. ஒரே நாடு, ஒரே சிவில் சட்டம், நதி நீர் இணைப்பு என கொள்கை அடிப்படையில் செயல்படுவது பிடித்தது. கருத்து சுதந்திரம் உண்டு. எல்லா மொழி, மதம், இனத்தவரும் இதில் உள்ளனர். பா.ஜ., மதவாத கட்சி கிடையாது. மக்கள், தேச நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகின்றனர்.


அரசியலில் ரோல் மாடல் யார்பிரதமர் மோடி தான். தன்னை தானே உருவாக்கி கொண்ட மனிதர். 15 ஆண்டுகளாக முதல்வர், ஆறு ஆண்டுகளாக பிரதமராக இருந்த போதும் ஓட்டு வங்கி அரசியல் செய்தது இல்லை. தனி மனித ஒழுக்கம். இதுபோல பிரதமர் குறித்து சொல்லிக் கொண்டே செல்லலாம். மத்திய அரசின் விவசாய சட்டத்தால், விவசாயிகள் விளைபொருட்களை தட்டுபாடு இன்றி எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று விற்க முடியும். நான் விவசாயம் செய்பவன். வயலில் இறங்கி உழுது இருக்கிறேன். சட்டத்தை எதிர்க்கும் ஸ்டாலின் விவசாயி கிடையாது. என்றாவது அவரது கால் விளைநிலத்தில் பட்டிருக்குமா. அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பர். ஆனால் செய்ய மாட்டார்கள். ஆனால் பிரதமர் மோடி விவசாயிகளுக்காக ஆண்டுக்கு ரூ.ஆறாயிரம் உதவிதொகை வழங்கி வருகிறார்.


கட்டுரை: மேஷ்பா

புகைப்படம்: தீப்சி

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.SENTHILKUMAR - Neyveli,இந்தியா
28-அக்-202009:17:11 IST Report Abuse
A.SENTHILKUMAR முதலில் உங்களுடைய பெயருக்கு பின்னால் உள்ள சாதி பெயரை தூக்கி எறியுங்கள் அதன் பிறகு மாற்றம் தானாக வந்துவிடும்.
Rate this:
Yuvaraj Velumani - india,ஐக்கிய அரபு நாடுகள்
02-நவ-202011:40:49 IST Report Abuse
Yuvaraj Velumaniஉங்க வீட்டில் பொய் முதலில் சரி செயுங்கள். இவருக்கு புத்தி மதி சொல்ல உங்களுக்கு ஒரு தகுதியும்இல்லை...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-அக்-202005:09:28 IST Report Abuse
J.V. Iyer ஒரு அதிகாரம் உள்ள நல்ல பதவியை விட்டு தமிழக அரசியலுக்கு அண்ணாமலை (மாஜி) ஐ.பி.எஸ் அவர்கள் வந்திருப்பது தமிழ் மக்கள் செய்த புண்ணியம். இந்தியாவுக்கு மோடிஜி கிடைத்திருப்பது போல, தமிழ்நாட்டிற்கு அண்ணாமலை (மாஜி) ஐ.பி.எஸ். இவரை தமிழ் வோட்டாளர்கள் நல்ல முறையில் வரவேகவேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டிற்கு ஒரு நல்ல மாற்றம் வரும்.
Rate this:
Perumal - Chennai,இந்தியா
29-அக்-202013:19:48 IST Report Abuse
PerumalThis fellow has joined politics for his personal welfare. Idiots like you are only welcoming him....
Rate this:
Yuvaraj Velumani - india,ஐக்கிய அரபு நாடுகள்
02-நவ-202011:37:39 IST Report Abuse
Yuvaraj Velumaniநீங்க. அடுத்தவங்களுக்கு புத்திமதி சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு...
Rate this:
Yuvaraj Velumani - india,ஐக்கிய அரபு நாடுகள்
02-நவ-202011:38:48 IST Report Abuse
Yuvaraj Velumaniநீங்க புத்திசாலிய. அடுத்தவங்களுக்கு புத்திமதி சொல்ல வந்துட்டாரு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X