சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : அக் 18, 2020
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்சரிந்த 'கார்பன்'இந்த ஆண்டின் முதல் பாதியில் உலகில் பதிவான கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தின் அளவு, 8.8 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு காரணம் கொரோனா ஊரடங்கு. அதிலும் ஏப்ரலில் பெரிய அளவில் சரிவு இருந்தது. சீனா, பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் விஞ்ஞானிகள் இணைந்து நடத்திய ஆய்வில், கடந்தாண்டு முதல் பாதியுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு முதல்

அறிவியல் ஆயிரம்
சரிந்த 'கார்பன்'

இந்த ஆண்டின் முதல் பாதியில் உலகில் பதிவான கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தின் அளவு, 8.8 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு காரணம் கொரோனா ஊரடங்கு. அதிலும் ஏப்ரலில் பெரிய அளவில் சரிவு இருந்தது. சீனா, பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் விஞ்ஞானிகள் இணைந்து நடத்திய ஆய்வில், கடந்தாண்டு முதல் பாதியுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு முதல் பாதியில், கார்பன் அளவு 155 கோடி டன் அளவுக்கு குறைந்துள்ளது. இவ்வளவு பெரிய சரிவு, இரண்டாம் உலகப் போர் சமயத்தில் கூட ஏற்பட்டதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

தகவல் சுரங்கம்
பெரிய துறைமுகம்

கப்பல் மூலம் சரக்கு போக்குவரத்தை கையாளும் இடம் துறைமுகம். இந்தியாவில் 13 முக்கிய துறைமுகங்கள் உள்ளன. 180க்கும் மேற்பட்ட சிறிய துறைமுகங்கள் உள்ளன. இதில் சரக்குகளை கையாளும் எண்ணிக்கை அடிப்படையில் பெரிய துறைமுகம் மும்பை. இது ஒரு இயற்கை துறைமுகம். இங்கு 40 அடி ஆழம் உள்ளது. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சரக்குகளில் ஐந்தில் ஒரு பகுதியை கையாள்கிறது. இங்கு பெட்ரோலிய பொருட்கள், கெமிக்கல் திரவங்கள், கனிமங்கள், மாங்கனிசு, பருத்தி துணிகள் மற்றும் இயந்திரங்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X