புதுடில்லி:இந்த ஆண்டு நடந்து முடிந்த, 'நீட்' தேர்வில், அதிக தேர்ச்சி பெற்றோர் அடங்கிய மாநிலங்கள் பட்டியலில், உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், சமீபத்தில், நாடு முழுதும், நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை, 13.66 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவுகளை, தேசிய தேர்வு முகமை, சமீபத்தில் வெளியிட்டது. அதில், 7.7 லட்சம் பேர், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப் பட்டது.இதில், ஒடிசாவை சேர்ந்த ஷோயப் அப்தாப் என்ற மாணவர், அகில இந்திய அளவில், முதலிடம் பிடித்தார். பிழைநாட்டில் அதிகபட்சமாக, திரிபுராவில், 88 ஆயிரத்து, 889 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும், அந்த தகவலில் பிழை இருப்பதாக, பின்னர் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தேர்வு முடிவுகளில் இருந்த பிழைகள் திருத்தப்பட்டு, புதிய தரவுகளை, தேசிய தேர்வு முகமை, வெளியிட்டது. இது குறித்து, மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:இந்த ஆண்டு நடந்து முடிந்த நீட் தேர்வில், அதிக தேர்ச்சி உடைய மாநிலங்கள் பட்டியலில், உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இங்கு, அதிகபட்சமாக, 88 ஆயிரத்து, 889 பேர் தேர்ச்சி பெற்றுஉள்ளனர்.
மஹாராஷ்டிராவில், 79 ஆயிரத்து, 974 பேர்; ராஜஸ்தானில், 65 ஆயிரத்து, 758 பேர்; கேரளாவில், 59 ஆயிரத்து, 404 பேர்; கர்நாடகாவில், 55 ஆயிரத்து, 9 பேர்; டில்லியில், 23 ஆயிரத்து, 554 பேர்; ஹரியானாவில், 22 ஆயிரத்து, 395 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பெண்கள் அதிகம்இந்த ஆண்டு, ஆண்களை காட்டிலும் பெண்களே அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். 4.27 லட்சம் பெண்களும், 3.43 லட்சம் ஆண்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய மூன்றாம் பாலினத்தவர்கள் நான்கு பேரில், ஒருவர் தேர்ச்சி அடைந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE