தடுப்பூசி தயாரிப்பில் சிக்கல் இல்லை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

'தடுப்பூசி தயாரிப்பில் சிக்கல் இல்லை'

Updated : அக் 20, 2020 | Added : அக் 18, 2020 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி:'இந்தியாவில், கடந்த ஜூன் முதல், கொரோனா வைரசில் எந்த மாற்றமும் தெரியாததால், அதற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் எந்த சிக்கலும் இல்லை' என, உயிரி தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.நாட்டின், 'பயோ டெக்னாலஜி' எனப்படும், உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில், மேற்கு வங்கத்தில், தேசிய உயிரி மருத்துவ மரபணு தொகையியல் நிறுவனம் நடத்தப்படுகிறது. இந்த நிறுவனம்,
COVID19, Corona Vaccine, India, தடுப்பூசி, இந்தியா

புதுடில்லி:'இந்தியாவில், கடந்த ஜூன் முதல், கொரோனா வைரசில் எந்த மாற்றமும் தெரியாததால், அதற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் எந்த சிக்கலும் இல்லை' என, உயிரி தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டின், 'பயோ டெக்னாலஜி' எனப்படும், உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில், மேற்கு வங்கத்தில், தேசிய உயிரி மருத்துவ மரபணு தொகையியல் நிறுவனம் நடத்தப்படுகிறது. இந்த நிறுவனம், பல்வேறு மாநிலங்களில் உள்ள தன் கிளை நிறுவனங்களுடன் இணைந்து, கொரோனா பரவல் பற்றி ஆய்வு நடத்தி, உயிரி தொழில் நுட்பத் துறையிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டில் கடந்த மார்ச்சில்இருந்து, கொரோனா தீவிரமாக பரவத் துவங்கியது. நாங்கள், கடந்த ஏப்ரல் மாதம் முதல், கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களை ஆய்வு செய்து வருகிறோம். துவக்கத்தில், கொரோனா பாதிப்பில் பல மாற்றங்கள் தென்பட்டன. மே மாதம் வரை, மூச்சுத் திணறல், காய்ச்சல், இருமல் உட்பட பல நோய்களால், பலரும் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. ஆனால், ஜூன் மாதத்திலிருந்து கொரோனா பாதிப்பில் பெரும் மாற்றம் ஏற்படவில்லை. மூச்சுத் திணறலால் தான், பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ஊரடங்கு தேவையில்லை



கொரோனா பரவல் கட்டுப்பாடு நடவடிக்கைகள் பற்றி பரிந்துரைக்க, மத்திய அரசு ஒரு குழு அமைத்துள்ளது. இந்த குழுவின் தலைவர் வித்யாசாகர் கூறியதாவது:கொரோனா பரவலை கட்டுப்படுத்த, நாட்டில் எந்த மாநிலத்திலும், மாவட்டத்திலும், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தத் தேவையில்லை. ஊரடங்கை அமல்படுத்தும்படி, நாங்கள் பரிந்துரைக்கவும் இல்லை. நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் தான் உள்ளது. அதனால், எந்த அச்சமும் தேவையில்லை.இவ்வாறு, அவர் கூறினார் .

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X