பாலிடெக்னிக்கில் சேர கால அவகாசம் நீட்டிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாலிடெக்னிக்கில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

Added : அக் 19, 2020
Share
சென்னை : அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், மாணவர் சேர்க்கைகான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.புரசைவாக்கத்தில் உள்ள, அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டப்பட்டு, இயந்திர மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில், மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இப்பாட பிரிவுகளில், இரண்டாம் சுழற்சி முறையிலும்

சென்னை : அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், மாணவர் சேர்க்கைகான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புரசைவாக்கத்தில் உள்ள, அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டப்பட்டு, இயந்திர மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில், மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இப்பாட பிரிவுகளில், இரண்டாம் சுழற்சி முறையிலும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இக்கல்லுாரியில், முதலாம் ஆண்டு, மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வு, 'ஆன்லைனில்' நடந்து, மாணவ - மாணவியர் சேர்க்கை பெற்றுள்ளனர். மேலும், மாணவர்களின் நலன் கருதி, சேர்க்கைக்கான கால அவகாசம், அக்., 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 'ஆன்லைனில்' விண்ணப்பித்து, சேர்க்கை பெறாதவர்களும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு, கல்லுாரியில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X