ஆன்லைனில் தருவதில்லை பட்டா... அதெல்லாம் மக்களுக்கு அல்வா!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைனில் தருவதில்லை பட்டா... அதெல்லாம் மக்களுக்கு 'அல்வா!'

Added : அக் 19, 2020
Share
கோவை:பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவாகும் பத்திரங்களுக்கு, ஆன்லைனில் பட்டா மாறுதலாகிறது என்று சொல்வது வெறும் அறிவிப்பாகவே உள்ளது; முற்றிலும் நடைமுறைக்கு வரவில்லை.சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவணம் பதிவு செய்தவுடனே, ஆன்லைனில் பட்டா மாறுதல், நடைபெறும் என்று அரசு அறிவித்தது. கிராம நிர்வாக அதிகாரிகள், ஆவணம் பதிவு செய்து, ஆன்லைனில் விண்ணப்பித்து, உரிய ஆவணங்களை

கோவை:பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவாகும் பத்திரங்களுக்கு, ஆன்லைனில் பட்டா மாறுதலாகிறது என்று சொல்வது வெறும் அறிவிப்பாகவே உள்ளது; முற்றிலும் நடைமுறைக்கு வரவில்லை.சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவணம் பதிவு செய்தவுடனே, ஆன்லைனில் பட்டா மாறுதல், நடைபெறும் என்று அரசு அறிவித்தது. கிராம நிர்வாக அதிகாரிகள், ஆவணம் பதிவு செய்து, ஆன்லைனில் விண்ணப்பித்து, உரிய ஆவணங்களை சமர்ப்பித்தாலும், கோவையில் எந்த தாலுகாவிலும் பட்டா மாற்றம் செய்து கொடுப்பதில்லை.கோவையில் விவசாய பூமிகளை, கடந்த இரண்டு மாதங்களாக பதிவுக்கு பத்திரப்பதிவு அலுவலகங்களில் தாக்கல் செய்யும்போது, பதிவுத்துறையின் உத்தரவின்படி, விற்பவரின் பெயரிலேயே, சில சார்பதிவாளர்கள் பட்டா கேட்கின்றனர்.அதன் படி பட்டாவை சமர்ப்பித்தாலும், வாங்குபவர் பெயரில் ஆன்லைனில் பட்டா மாறுதல் செய்து தர வேண்டும். ஆனால் அதற்கான பணிகள் நடைபெறுவதில்லை. வழக்கம் போல் கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த்துறை ஆய்வாளர், தாசில்தார் அலுவலகத்துக்கு நடையாய் நடக்க வேண்டியிருக்கிறது.இந்நிலை மாற வேண்டும்; அதற்கான பணிகளை வருவாய்த்துறை துரிதப்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X